bjp alliance with thirumavalavan Admin
தமிழ்நாடு

பேச்சுவார்த்தை அழைத்த பாஜக...திருமாவளவன் சொல்வதன் உள்அர்த்தம் புரியுதா?

"நாங்கள் எப்போதும் வெறும் கையால் முழம் போட மாட்டோம். எத்தனை நடிகர்கள், இயக்குனர்கள் வந்தாலும் எங்கள் களம் வேறு"

மாலை முரசு செய்தி குழு

சென்னை : சென்னையில் வணிகர் தினத்தை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் பேசியது தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவர் கூறிய தகவல் மறைமுகமாக பல கட்சிகளுக்கு கூறும் மெசேஜ் என அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன. 

திருமாவளவன் பேசுகையில், "நாங்கள் எப்போதும் வெறும் கையால் முழம் போட மாட்டோம். எத்தனை நடிகர்கள், இயக்குனர்கள் வந்தாலும் எங்கள் களம் வேறு. ஏ.சி. அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வதில்லை. சாதியவாதிகளுடனும், மதவாதிகளுடனும் எந்த காலத்திலும் கைகோர்க்க மாட்டோம். திருமாவளவனை சராசரி அரசியல்வாதியாக கணக்கு போட வேண்டாம். அ.தி.மு.க., விஜய், பாஜக என எந்த பக்கத்திலும் கதவுகளை திறந்து வைக்கவில்லை. 

பேச்சுவார்த்தைக்கு அழைத்ததா பாஜக?

டெல்லியில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவர் என்ன பாஜக.,விற்கு அழைத்தார். பிரதமரிடம் பேசலாம் என்று கூறினார். ஆனால், அதை வேண்டாம் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். தற்போது இருக்கும் மதசார்பற்ற கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம். 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும். மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்-அமைச்சராக வேண்டும். ஆனால், அதைவிட சனாதன சக்திகள் எந்த சூழலிலும் வலிமை பெற்று விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். பாஜக., உடன் கூட்டணி சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை வீழ்த்துவோம் என்றார் திருமாவளவன்.

திமுக.,வுக்கு மெசேஜா?

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆட்சியில் பங்கு வேண்டும் என வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய திருமாவளவன், தற்போது திமுக கூட்டணியில் தொடர்வது உறுதி. பாஜக.,வை வீழ்த்துவோம். பாஜக பேச்சுவார்த்தைக்கு அழைத்தது என்று மேடையில் வெளிப்படையாக பேசி இருப்பது இது திமுக தலைமையிடம் கூடுதல் சீட் தர வேண்டும் என மறைமுகமாக உணர்த்துவதாக சிலர் கூறுகிறார்கள்.

ஒருவேளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கூடுதல் சீட் தர திமுக தலைமை மறுத்தால் பாஜக-அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து திருமாவளவன் பரிசீலிக்க வாய்ப்பு ஏற்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. 2026 தமிழக சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது இந்த முறை கூடுதல் சீட் கேட்பதுடன், சில வலுவான நிபந்தனைகளையும் முன்வைக்க விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே சொல்லப்பட்டு வருகிறது. 

வாய்ப்பு இருக்கா?

திருமாவளவன், பாஜக-அதிமுக கூட்டணியில் இணைவது கடினமான விஷயம் தான். என்றாலும், அப்படி நடந்தால் அது ஒரு பெரிய அரசியல் மாற்றமாக இருக்கும். ஏனென்றால், திருமாவளவன் ஒரு வலுவான தலித் தலைவர். அவர் தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். அவர் பாஜக-அதிமுக கூட்டணியில் இணைந்தால், அது தலித் மக்களின் வாக்கு வங்கியை பாஜக-அதிமுக கூட்டணிக்கு கொண்டு வரும்.

ஆனால், திருமாவளவன் பாஜக-அதிமுக கூட்டணியில் இணைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனென்றால், திருமாவளவன் பாஜகவின் இந்துத்துவ அரசியலை கடுமையாக எதிர்த்து வருகிறார். மேலும், அதிமுகவும் பாஜகவுடன் அவ்வளவு இணக்கமாக இல்லை.

திருமாவளவன் பாஜக-அதிமுக கூட்டணியில் இணைந்தால் ஏற்படும் மாற்றங்கள் :

தலித் வாக்கு வங்கி: திருமாவளவன் பாஜக-அதிமுக கூட்டணியில் இணைந்தால், அது தலித் மக்களின் வாக்கு வங்கியை பாஜக-அதிமுக கூட்டணிக்கு கொண்டு வரும். இது பாஜக-அதிமுக கூட்டணிக்கு ஒரு பெரிய பலமாக இருக்கும்.

அதிமுக-பாஜக உறவு: அதிமுக-பாஜக உறவை வலுப்படுத்தும். இது இரண்டு கட்சிகளுக்கும் ஒரு பெரிய பலமாக இருக்கும்.

திமுகவின் நிலை: திமுகவின் நிலையை பலவீனப்படுத்தும். ஏனென்றால், திருமாவளவன் திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருந்து வருகிறார்.

சமூக நீதி: திருமாவளவன் பாஜக-அதிமுக கூட்டணியில் இணைந்தால், அது தமிழகத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தை பாதிக்கும். ஏனென்றால், திருமாவளவன் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வருகிறார்.

தேர்தல் நெருங்க நெருங்க பலரும் பல விதமான விஷயங்களை முன் வைத்து வருவதால் இனி வரும் நாட்களில் பல அரசியல் மாற்றங்கள், திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்