தமிழ்நாட்டில் இளைஞர்களிடையே பாஜகவை கொண்டு சேர்த்தவர் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை. தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்ததற்கு முக்கிய காரணமாக இருந்த இவர் கடந்த சில வருடங்களாக கட்சி பணிகளில் பெரிதும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் விலகியே இருந்தார். கட்சியில் இவருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எந்த பதவியும் வழங்காததே இதற்கு காரணம் என சொல்லப்பட்டு வந்த நிலையில் விரைவில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவார் என பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று டெல்லியில் பாஜகவின் மூத்த தலைவர்களை சந்தித்த அவர் பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கான கடிதத்தை பாஜக தேசிய தலைமை இடம் வழங்கியும் அந்த கடிதத்தை பாஜக தேசிய தலைமை ஏற்கவில்லை. தொடர்ந்து அண்ணாமலையை சமரசம் செய்யும் முயற்சியில் தீவிரமாக ஆர் எஸ் எஸ், மற்றும் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது. அண்ணாமலை கடந்த வருடமே கட்சியிலிருந்து வெறியேற நினைத்ததாக சொல்லப்படும் நிலையில் சட்டமன்றத் தேர்தலினால் அந்த முடிவிலிருந்து பின் வாங்கி இப்போது கட்சியிலிருந்து வெளியேறுவதற்கான கடிதத்தை வழங்கியுள்ளார்.
பாஜக கட்சியில் உட்கட்சி பூசல் அதிகமாக இருப்பதால் , தேசிய அரசியல் தேவையில்லை, மாநில அரசியல் போதும் என்ற நிலைப்பாட்டில் அண்ணாமலை இந்த முடிவை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. பாஜகவில் இருந்து வெளியேறும் முடிவில் சற்றும் பின்வாங்காத அண்ணாமலையை தொடர்ந்து இரண்டாவது நாளாக சமரசம் செய்யும் நோக்கத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அவர்களிடம் அண்ணாமலை “ என்னை நம்பி இளைஞர்கள் அதிகமாக பாஜகவில் சேர்ந்தார்கள் ஆனால் அவர்களுக்காக எதுவும் செய்ய முடியாத நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். இதனால் இளைஞர்கள் பெரிய மன வருத்தத்தில் உள்ளார்கள்.
என்னை நம்பி என்னால் கட்சியில் சேர்ந்த இளைஞர்கள் கூட பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை இது பெரிய வருத்தம். தலைவர் பொறுப்பு அளித்தாலும் கட்சியில் மீண்டும் மற்ற தலைவர்கள் ஒத்துழைப்பு தருவார்களா என்பது தெரியவில்லை. அதனால் புது கட்சி தொடங்கினாலும் பாஜகவோடு இணக்கமாக செயல்படக்கூடிய வகையில் தான் இருப்பேன். நிர்மலா சீதாராமன் கோவை ஹோட்டல் உரிமையாளர் வீடியோ வெளியானதில் இருந்து என்னை கார்னர் செய்து கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மீண்டும் கட்சியில் தொடர்ந்தால் பொதுவெளியில் பகிரங்கமாக ஏதாவது பேசி விடுவேன். எனவே நான் தனித்து செயல்படுகிறேன்” என தான் கட்சியில் இருந்து விலகுவதற்கு நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்