சென்னையில் நடைபெற்ற அமிர்தம் இல்லத் திருமண விழாவில் முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அதில் அவர், "லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு.. கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்துவதாக" கூறினார். மேலும், "இளைஞர்கள் திராவிட இயக்க வரலாறுகளை சிந்தித்து செயல்பட வேண்டும்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், "ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு, அது ஏமாற்றமாக மாறியுள்ளதாக" அவர் சாடினார். மேலும், "இந்த நிலை மாறவேண்டும்" என்றும் அவர் அந்த திருமண விழாவில் பேசினார்.
திமுகவினை சேர்ந்த பல புள்ளிகளும் ஆளும் அரசினை திருமண மேடைகளில் விமர்சித்து வருகின்றன. அதை தவெக அரசு நகைச்சுவையாக விமர்சித்தும் வந்தது. பொதுவாகவே பெரியாரும், சி.என்.அண்ணாதுரை மற்றும் மு.கருணாநிதி போன்ற தலைவர்களாலும் திருமண மேடைகளில் தங்களது அரசியல் நிலைப்பாடு, ஆளும் அரசின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பது, அதனை விமர்சிப்பது போன்ற அரசியல் பேச்சுக்களை காலம் காலமாக திருமண மேடைகளை பயன்படுத்தி செய்து வந்தனர். மேலும், அவர்கள் திருமணங்களைத் தனிப்பட்ட சடங்குகளாகக் கருதாமல், சமூக சீர்திருத்தம், பகுத்தறிவு மற்றும் அரசியல் சித்தாந்தங்களை நேரடியாகப் பெருமளவிலான மக்களிடம் பரப்புவதற்கான பொது மேடைகளாகக் கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தற்போது திமுக சமீப காலமாக பல்வேறு திருமண மேடைகளில் பேசிவருகின்றன. அதில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், "முன்பு வீட்டிற்கு ஒரு பட்டதாரி, மருத்துவர் என்று பூத்தாற்போல இருப்பார்கள். ஆனால் இன்று வீட்டிற்கு வீடு பட்டதாரிகளும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் திராவிட கழகம்தான்" என்று பெருமிதத்துடன் பேசியுள்ளார். மேலும், "குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களையே சூட்டுங்கள்" என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், லட்சக்கணக்கான மக்கள் செய்த தவறு.. கோடிக்கணக்கான மக்களை துன்புறுத்துவதாக கூறினார். மேலும், இளைஞர்கள் திராவிட இயக்க வரலாறுகளை சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், ஒரு மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்பட்டு அது ஏமாற்றமாக மாறியுள்ளதாக அவர் சாடினார்.
முன்னதாக, "அறிவாலயத்தை வெள்ளையடித்து வாடகைக்கு விடலாம்" என்று அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு திமுக MP ஆ. ராசா காட்டமாக தனது பதிலை அளித்துள்ளார். அதில் அவர், "தமிழ்நாட்டில் இருக்கும் தறுதலை கூட்டத்தை விரட்டுவதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்" என காட்டமாக பதிலளித்துள்ளார். "இன்று சில தறுதலைகளுக்கு, காரிலே தேசிய கோடி வந்து விட்ட காரணத்தினால், அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடலாம் என்று என்று சில தறுதலை அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழ்நாட்டில் பலரும் தங்களது வீட்டில் வெள்ளையடித்து கொண்டார்கள். தமிழ்நாடு தனக்கு வெள்ளையடித்துக் கொண்டது. எனவே அந்த அறிவாலயத்தை குறைசொல்லுகின்ற ஒரு தறுதலை கூட்டம் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது" என்று காட்டமாக தனது விமர்சனத்தை முன்வைத்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்