சென்னை வளசரவாக்கம் சாவித்திரி நகர் 1 வது தெருவில் உள்ள பங்களா வீட்டில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டு தீ வீடு முழுவதும் பரவியது. இதனை அறிந்து அங்கு விரைந்த ராமாபுரம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டுள்ள வீட்டின் உட்புறத்தில் வயதான தம்பதிகளான நடராஜன் மற்றும் தங்கம் ஆகிய இருவரும் சிக்கிக்கொண்டிருந்த நிலையில் வீட்டிற்குள் அலங்காரத்திற்காக பொருத்தப்பட்டுள்ள அதிகமான கண்ணாடிகள் வெடித்த நிலையில் தீ அணைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்நிலையில் உள்ளே சிக்கி இருக்கும் தம்பதிகளை பாதுகாப்பாக இருக்கிறார்களா இல்லை தீயால் பாதிக்கப்பட்டார்களா என்ற பதற்றம் நிலவி கொண்டிருந்த சூழலில், தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் ஐந்து பேர் கொண்ட குழு வீட்டிற்குள் சென்று, தம்பதியினரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடலுக்கு பிறகு தம்பதிகளை இறந்த நிலையில் தீயணைப்பு துறையினர் மீட்டுள்ளனர். தம்பதியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்