தமிழ்நாடு

அசல் தாய் மாமன்களே தோற்றுப் போவார்கள்! காதில் பெயரை உச்சரித்து.. தங்க மோதிரம் அணிவித்த விஜய் - இந்தியாவிலேயே எந்தவொரு முதல்வரும் செய்யாத சம்பவம்!

இதனை கண்டு குழந்தையின் தாய் ஒருவர் நெகிழ்ந்து போய் அவரின் தோளில் சாய்ந்து அழுதார்

Muthu Lakshmi

தமிழக அரசு சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நடைபெற்றது. இதனை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் மதுரை வந்தார். அங்கு அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தவெக வாக்குறுதியின்படி தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 15 அன்று தொடங்க உள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் சி என். அண்ணாதுரை பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்றும் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டது. இந்த திட்டம் தேர்தல் பிரச்சாரத்தின் போதே கவனம் பெற்ற ஒரு திட்டமாக இருந்து வந்தது. தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தை செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் விஜய் உத்தரவு வெளியிட்டார். 

இந்த திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள், தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இதற்கு தகுதி பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜூன் 22-2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தாய்மாமன் சீர் என்பது மரபு சார்ந்த ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. தமிழர்களின் மரபில் இன்றளவும் தொடர்ந்து வரும் ஒரு முக்கிய நிகழ்வு தாய்மாமன் சீர். தனது தங்கைக்கோ, அக்காவுக்கோ பிறக்கும் குழந்தைகளுக்கு உடன்பிறந்த சகோதரர்கள் செய்யும் சீர் சிறப்பு வாய்ந்தது.

அந்த சிறப்பை தற்போது தமிழக முதல்வர் விஜய், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தன்னை தாய்மாமனாக கருதி, சீர் செய்யும் விதமாக இந்த தேர்தல் வாக்குறுதியை அளித்திருந்தார். அந்த வகையில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில், குழந்தைகளுக்கு மோதிரம் அனுவித்து தொடங்கிவைத்தார். அதில் சில தாய்மார்கள் குழந்தையின் பெயரை அவர்களின் காதில் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அதை சற்றும் மறுக்காமல் உடனடியாக குழந்தைகளின் காதில் 3 முறை பெயரை சொல்லி நிஜ தாய்மாமனாக மாறினார். இதனை கண்டு குழந்தையின் தாய் ஒருவர் நெகிழ்ந்து போய் அவரின் தோளில் சாய்ந்து அழுதார்.

இந்தியாவில் இதுபோன்ற திட்டம் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்பதும் தமிழகத்தில் தான் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு திட்டம் ஒரு முக்கியமான உறவை மையப்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்