மதுரை புறப்பட்ட விஜய்: 'பிஞ்சு விரல்களுக்கு தங்க மோதிரம்' 2500 காவலர்கள் பாதுகாப்பு; மீனாட்சி அம்மன் தரிசனம்?

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா நடைபெறக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முழுவதிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
Vijay travel to Madurai
மதுரை புறப்பட்ட விஜய்: 'பிஞ்சு விரல்களுக்கு தங்க மோதிரம்' 2500 காவலர்கள் பாதுகாப்பு; மீனாட்சி அம்மன் தரிசனம்?
Published on: 
Updated on: 
2 min read

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கிவைக்க நீலாங்கரை இல்லத்தில் இருந்து (9:20 மணியளவில்) புறப்பட்டுள்ளார் முதலமைச்சர் விஜய். சென்னை விமான நிலையம் செல்லும் அவர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் செல்கிறார்.

தமிழக அரசு சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தாய்-சேய் நல வார்டில் நடைபெற உள்ளது. இதனை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார்.

பள்ளி தேர்வு விடுமுறை என்பதாலும் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு முதன் முறையாக ஜோசப் விஜய் மதுரைக்கு வருகை தர உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் வருகை தருவார்கள் என்பதால் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

மதுரை விமான நிலையத்திலிருந்து காலை 11 மணிக்கு வருகை தந்து பின்னர் மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி விரகனூர் ரிங் ரோடு சாலை , சிந்தாமணி சாலை மற்றும் வைகை தென்கரையோர சாலை, அண்ணா நகர், ஆவின் சந்திப்பு, பனகல் சாலை வழியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டரங்கு மேடைக்கு வருகை தருகிறார்.

முதலமைச்சரை மக்கள்நல்வாழ்வு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

பின்னர் 12.30 மணியளவில் விழா மேடையில் 30 குழந்தைகளின் தாய்மார்களுக்கு முதலமைச்சர் விஜய் தங்க மோதிரங்களை வழங்கி திட்டத்தை தொடங்கிவைக்கிறார். இதில் இரட்டை குழந்தைகளின் தாயார் ஒருவருக்கும் தங்க மோதிரங்கள் வழங்கவுள்ளார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா நடைபெறக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முழுவதிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து பனகல் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை வழியாக காந்தி அருங்காட்சியகத்திற்கு மதியம் 1 மணியளவில் வருகை தந்து புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கிறார்.

பின்னர் காந்தி அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள், அவர் அணிந்திருந்த துணிகள், பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.

இதனைத்தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு பின்னர் ஓய்வெடுத்து மாலை 4 மணிக்கு மேல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை விமான நிலையம் முதல் கோரிப்பாளையம், மீனாட்சியம்மன் கோவில். வரை 16 கிலோ மீட்டர் சாலைகளின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன மழை நீர் வடிகால் செல்லும் பகுதிகளில் மரத்தினால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தொண்டர்கள் வரிசையில் நின்று பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

முதலமைச்சர் வரவேற்கும் விதமாக தவெக சார்பில் ஆங்காங்கே விளம்பர பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

பொதுமக்கள் நிற்கும் பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக குடிநீர் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 2500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்ததில் இருந்து, மீனாட்சி அம்மன் கோவிலில் தினசரி மக்கள் கூட்டம் பெருந்திரளாக வந்துசெல்லும் நிலை இருக்கிறது. இந்தநிலையில் முதலமைச்சர் அங்கே செல்வது பாதுகாப்பு குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதனால் மீனாட்சி அம்மன் கோவில் திட்டம் ரத்து செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Vijay travel to Madurai
"என் வாழ்நாளில்".. இன்று காலையிலேயே.. முதல்வர் விஜய் கண்ணீருடன் வெளியிட்ட அறிக்கை!
Vijay travel to Madurai
"இதுல கூடவா கூட்டு?" ஜெம் வீரமணி வழக்கைக் காட்டி வாக்கு கேட்ட விஜய்.. என்ன பேசினார்?
Vijay travel to Madurai
மதுராந்தகத்தில் ஒட்டுமொத்த ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்த முதல்வர் விஜய்.. அப்படி என்ன பேசினார்? முழு உரை விவரம் இங்கே

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com