நேற்று டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் தமிழகத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக கட்சியின் தலைவர் வைகோ மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார். இந்திய கூட்டணியில் தமிழகத்தில் இருந்து முக்கிய பங்கு வகித்த திராவிட முன்னேற்ற கழகம் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கூட்டணியில் திமுக பங்கேற்காதது வருத்தமளிப்பதாகவும், அவர்கள் பங்கேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
நேற்று நடந்து முடிந்த இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு பிறகு பேசிய திருமாவளவன் காங்கிரஸ் மீதான அதிருப்தியையும் குறிப்பிட்டு பேசியுள்ளார். அவர்முன்வத்த கருத்துக்களாவது, “இந்திய மாணவர்களின் எதிர்காலம், கல்வித்துறையை பாஜக அரசு கையாண்ட விதத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் வினாத்தாள் கசிவுகள் காரணமாக பல முக்கியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது கல்வி அமைப்பில் நிலவும் முறைகேடுகள் மற்றும் நிர்வாகத் தோல்விகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சக்கணக்கான மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பொறுப்பை பாஜக அரசில் யாரும் ஏற்கவில்லை” என்றும் பொறுப்பேற்க வேண்டிய மத்திய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் இதுவரை குறிப்பிடத்தக்க வகையில் மௌனம் கத்துவருவத்திகாவையும் குற்றம் சாட்டினர்.
அதைத்தொடர்ந்து, “இதற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் தன்னெழுச்சியாக வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலைமை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு எச்சரிக்கை மணியாக இருக்க வேண்டும். இளைஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவதில் நாம் அரசியல் சக்திகளாகத் தவறியதன் விளைவாகவே இத்தகைய சூழல் உருவாகியுள்ளது. இளைஞர்களின் பிரச்சினைகளை முன்வைத்து குரல் கொடுக்கும் அமைப்புகளை நாம் எதிரியாகக் கருதக்கூடாது. மாறாக, இந்தியா கூட்டணி இந்த பிரச்சினைகளை ஒரு பெரிய தளத்தில் எடுத்துச் சென்று, இளைஞர்களின் குரலுக்கு வலு சேர்த்து, நாடு தழுவிய ஒருங்கிணைந்த போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். மேலும் “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தவறான பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் நாட்டை தீவிரமான நிதி நெருக்கடியை நோக்கி தள்ளியுள்ளன. நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடுமையாகக் குறைந்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது” எனவும் மத்திய பாஜக அரசுக்கு கண்டம் தெரிவித்தார்.
இத்தகைய போராட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க, எதிர்க்கட்சிகளுக்கிடையேயான பரஸ்பர நம்பிக்கை, புரிதல் மற்றும் ஒற்றுமை மிகவும் அவசியமானவை என தெரிவித்த திருமாவளவன், “அண்மைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பின்பற்றிய அணுகுமுறை, இந்தியா கூட்டணியில் உள்ள பல கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார். “குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி பின்பற்றிய தேர்தல் உத்தி, இந்த கூட்டணியின் வலுவான தூண்களாக இருக்கும் திரிணாமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் திமுக போன்ற கட்சிகளை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்தது. காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை நேர்மையாக மறுபரிசீலனை செய்து, கூட்டணியை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்தார்.
“இந்தியா கூட்டணி தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் ஒரு பரந்த கூட்டணியாகும். இத்தகைய கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பானது. ஆனால் அந்த வேறுபாடுகள் பிளவுகளாக மாற அனுமதிக்கக்கூடாது. ஒற்றுமையைப் பேண வேண்டிய பொறுப்பு மாநிலக் கட்சிகளுக்கு மட்டுமல்ல, தேசியக் கட்சிகளுக்கும் சமமாக உள்ளதாக குறிப்பிட்டார். “மத்திய-மாநில உறவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அழுத்தங்களை சந்தித்து வரும் இந்த நேரத்தில், தேசியக் கட்சிகள் கூட்டாட்சி மற்றும் ஒத்துழைப்பு நிர்வாகத்தின் அடிப்படையில் தங்களது நிலைப்பாடுகளை மறுஆய்வு செய்ய வேண்டும்” எனவும் கேட்டு கொண்டார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்