

அதிமுக கட்சியை சேர்ந்த சிவி சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, காலியான மாநிலங்களவை இடத்திற்கு வரும் ஜூன் 18 இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இன்று தமிழக முதல்வர் ஜோசப் விஜயை சந்தித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அவர், தமிழகத்தில் காலியாக உள்ள ஒரு ராஜ்யசபா இடத்தை காங்கிரஸ் கட்சி கேட்குமா? என்ற கேள்விக்கு “இது சம்பந்தமாக விஜய் உடன் ஆலோசனை நடத்துவோம்” என தெரிவித்திருந்தார். தற்போது அந்த ராஜ்யசபா சீட்காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் மைலம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி வி சண்முகம் கடுமையான போட்டியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இதற்காக தான் வகித்து வந்த மாநிலங்களைவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அதையடுத்து இந்தா இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் மாநிலத்தில் முதல் முறையை ஆட்சி அமைத்துள்ளது. நேரடியாக மாநிலங்களவையில் பங்கேற்க இந்த இடைத்தேர்தல் சரியான வாய்ப்பாக இருந்தது. ஆனால் தற்போது அந்த சீட் கூட்டணி கட்சியான காங்கிரஸ்-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது அரசியல் நகர்வாக இருக்கலாம் என தெரிகிறது. தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் பங்கேற்ற காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு பின் தவெக உடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையில் 2 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது கிடைத்துள்ள இந்த ராஜ்யசபா சீட், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தங்களை நிலை நிறுத்தும் வாய்ப்பை சரியாக பயன்படுத்துவதாக தெரிகிறது.
திமுக இந்தியா கூட்டணியில் தொடருமா? என்ற கேள்விக்கு, “திமுக - INDIA கூட்டணியின் ஒரு அங்கம், அதில் ஏதேனும் முன்னேற்றம் இருக்காதா என்பது பற்றி எனக்கு தெரியாது’ என்றும் “தமிழகத்தில் TVK தலைமையிலான கூட்டணிக்கு பெயர் கொடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் பங்கு பெறாது என்று தெரிகிறது. இதற்கு முன்னதாக இந்திய கூட்டணியில் இடம் பெற்ற சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ்- தவெக கூட்டணியை கண்டித்து இது ‘துரோகம்’ என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் சமூக வலை தளத்தில் பதிவு செய்திருந்தார். மேலும் திமுக தலைமை ஸ்டாலின் மற்றும் மேற்குவங்கம் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கனவே மாநிலங்களவையில் 29 உறுப்பினர்கள் உலா நிலையில் தற்போது 30 உறுப்பினர்களாக உயரும் பலம் உள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.