தமிழ்நாடு

தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம்.. திருமாவளவன் மற்றும் வைகோ பற்கேற்பு! இடது சாரிகள் கட்சி இடம்பெறாதது ஏன்?

அடுத்த அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளனர்

Muthu Lakshmi

தமிழக வெற்றி கழக கட்சியின் ஆதரவு கட்சிகளுடனான முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தவெக அமைச்சர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து செயல்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ​ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

​சென்னை ஈசிஆர்  சாலையில் உள்ள கோவளம் பகுதியில் அமைந்துள்ள 'தாஜ் பிஷர்மென்ஸ் கோவ்' என்ற தனியார் நட்சத்திர விடுதியில் இந்த உயர்மட்டக் கூட்டம் நடைபெறுகிறது. ​ஆலோசனைக் கூட்டத்தையொட்டி, முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களை வரவேற்கும் விதமாக ஈசிஆர் சாலை நெடுகிலும் கட்சித் தொண்டர்களால் கட்சித் கொடிகள் கட்டப்பட்டு விழாக்கோலம் காட்சியளிக்கிறது. முதலமைச்சர் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் வருகையை முன்னிட்டு, நட்சத்திர விடுதி வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விடுதிக்கு வரும் நபர்கள் மற்றும் வாகனங்கள் அனைத்தும் பல்வேறு கட்ட தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த அரசியல் கட்சிகள், அடுத்த அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளனர். இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலை இறுதிகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் கலந்து கொள்ள உள்ளனர். ஆனால் இந்த தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில், வெளியில் இருந்து ஆதரவு அளித்த வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளான CPI மற்றும் CPM "கூட்டத்தில் பங்கு பெற மாட்டோம்" என தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் அடுத்துடுத்த தேர்தல்களை தவெக உடனான கூட்டணியில் எதிர்கொள்ள போவதில்லை என்பது உறுதியாகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.