"விசில்ல போடுங்க.." மூதாட்டியை வற்புறுத்திய அலுவலர்; திமுகவினர் எதிர்ப்பு.. அதிரடி முடிவெடுத்த அதிகாரி! 
தமிழ்நாடு

"விசில்ல போடுங்க.." மூதாட்டியை வற்புறுத்திய அலுவலர்; திமுகவினர் எதிர்ப்பு.. அதிரடி முடிவெடுத்த அதிகாரி!

இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு முடங்கியது. புதிய அலுவலரின் மேற்பார்வையில் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கித் நடைபெற்று வருகிறது.

மாலை முரசு செய்தி குழு

தாராபுரம் இடைத்தேர்தலில் ஜெய்தூன் பீபி என்ற மூதாட்டியின் வாக்கை தவெகவுக்கு அளித்த தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொழிஞ்சிவாடி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் (வாக்குச்சாவடி எண்: 137), தேர்தல் அலுவலர் ஒருவர் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளரிடம் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மூதாட்டி ஊடக்கங்களிடம் தான் எதிர்கொண்ட சூழல் குறித்து விளக்கியுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாற்றுக் கட்சியினரின் முகவர்கள் மற்றும் வாக்குச்சாவடிக்கு வந்த பொதுமக்கள், சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரப்பரப்பு நிலவியதை தொடர்ந்து, வாக்குப்பதிவு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, புகாருக்குள்ளான தேர்தல் அலுவலரை உடனடியாக அப்பணியில் இருந்து விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர். அவருக்குப் பதிலாக ராஜம்மாள் என்பவர் புதிய தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணிநேரம் வாக்குப்பதிவு முடங்கியது. புதிய அலுவலரின் மேற்பார்வையில் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கித் நடைபெற்று வருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது 3 மணி நிலவரப்படி தாராபுரத்தில் 67.80% வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது ஏப்ரலில் நடந்த பொதுத்தேர்தலில் இருந்த 75.6% சுமார் 7.80% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்