DMK TVK Political Clash 
தமிழ்நாடு

“முப்பெரும் விழாவா?.. ஒப்பாரி விழாவா?” - ஸ்டாலின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தவெக!

அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல..

Mahalakshmi Somasundaram

திமுக முப்பெரும் விழா நேற்று (செப் 18) சென்னையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திமுக கொள்கைத் தலைவர்கள் அண்ணா, பெரியார் பிறந்தநாளுடன், திமுக தொடங்கப்பட்ட நாளும் இம்மாதத்தில் வருவதால், ஆண்டுதோறும் இம்மாதத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது. விழாவில் பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், “இப்போது நடக்கும் ஆட்சிக்கு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. ஆனா, ஏதோ பெரிய ஆள அடிச்ச மாதிரியும், தமிழ்நாடே அவங்கள வருகைக்காக காத்திருந்த மாதிரியும் இமேஜ் பில்டப் பண்ணிட்டு இருக்காங்க”.நம்ம கூட்டணியில் வென்றவர்கள் ஆதரவில்தான் ஆட்சி நடக்கிறது. ஆதரவு தந்த கட்சிகளையே நம்பாமல், குதிரை பேரம் நடத்திட்டு இருக்கிறதுதான் ஆளுங்கட்சியின் லட்சணம். என கடுமையாக சாடியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில் “முப்பெரும் விழாவா? ஒப்பாரி விழாவா? பேரறிஞர் அண்ணா பற்றி ஒற்றை வார்த்தைகூட உதிர்க்காத மேடையில், எங்கள் வெற்றித் தலைவரின் நடை, உடை, பாவனை பற்றி விரிவாக அலசியிருக்கிறார் கொளத்தூரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். மாண்புமிகு முதலமைச்சரின் ஒவ்வொரு அசைவுகளையும் வீட்டில் அமர்ந்து நீலாம்பரி போல repeat mode-ல் ஓட்டிப் பார்த்து ரசிக்கிறார் போல, முன்னாள்... இந்நாள் இரசிகர்.

கொத்துப் பரோட்டா போட்டதற்காக கொளத்தூர் மக்களுக்கு நன்றி தெரிவித்தவர், எதற்காக 3 முறை revaluation போட்டார்? மிசா கைதைப் பற்றி யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று இப்போது சொல்லும் பொய்ப் பிம்பம், 9 நிமிடக் காணொளியை ஏன் வெளியிட்டாராம்? பதற்றம் பற்றியதில் புலம்பிவிட்டாரோ? Detention copy காணாமல் போய்விட்டதோ? அன்று “வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா?” என்று வெற்றித் தலைவர் கேட்டபோது, வெற்று வெள்ளைத்தாளைத் தூக்கிக் காண்பித்த மங்காப் புகழ் கொண்ட வரலாறு அவர் ஆட்சியில் தான் நடந்தது என்பதை மறந்தாரோ?

Image buildup-ற்காக Walking with Harry Potter stick (எந்த ஜோசியர் சொன்னாரோ, கையில் குச்சியை எடுத்துப் போகச் சொல்லி), Mini vlog with Insta kids, cycle ride during foreign visits, monovlog videos என நித்தம் ஒரு விளம்பர shooting நடத்தி வந்த Shooting நாயகன், நடிப்பைத் துறந்துவிட்டு மக்கள் பணியாற்ற வந்த நம் வெற்றித் தலைவரைப் பார்த்து “நடிக்கிறார்” என்பது உச்சபட்ச நகைமுரண்! “ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சி” என்று ரீல்ஸ்களாக வெளியிட்டு ஒப்பாரி வைக்கிறார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்! மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருந்து மீண்டு வாருங்கள்.” என பதிவிட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்