கல்வி உதவித்தொகை முதல் அரசியல் விவாதம் வரை! - ஆய்வு மாணவர் பாரதிதாசனுக்கு.. முழுமையாக விடுவிக்கப்பட்ட ரூ.36 லட்சம்

தன்னை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கும் நிலை உள்ளது என்றும் தனது கல்வியை தொடர்வதற்கு தமிழக அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்
 research scholar bharathidasan
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் மலேசியாவில் PHD பயின்று வரும் மாணவர் பாரதிதாசன். இவர் 2023 தமிழக அரசு அறிமுகப்படுத்திய அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் மூளை தொடர்பான ஆராய்ச்சி படிப்பு பயின்று வருகிறார். இரண்டாம் ஆண்டு பயின்று வரும் இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது கல்வி உதவித்தொகை நிலுவை குறித்து வெளியிட்ட ஒரு வீடியோ தமிழ்நாட்டில் பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ குறித்து சட்டமன்றதிலும் விவாதிக்கப்பட்டது.

மீண்டும் செப் 17ம் தேதி மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் வெளியிட்ட வீடியோவில், தன்னை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கும் அபாயம் உள்ளது என்றும் தனது கல்வியை தொடர்வதற்கு தமிழக அரசு உரிய உதவிகளை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.

அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி திட்டத்தின் கீழ் ஒரு மாணவனுக்கு கல்வி நிறுவனத்திற்கு செலுத்தும் கட்டணம் மற்றும் வெளிநாட்டில் அவரது வாழ்க்கை செலவினம் மற்றும் இதர செலவினங்கள் ஆகியவை சேர்த்து அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.36 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கடந்த கல்வி ஆண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.5,01638/-பல்கலைக்கழகத்தின் வங்கி கணக்கிற்கும் ரூ.30,98,362 மாணவரது வங்கிக்கணக்குக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்தொகையில் விசா,விமானக் கட்டணம் தவிர மாணவரது ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்காக பெற்ற தொகை ரூ.27,40,140/- க்கான பில்லை தமிழக அரசு கோரியுள்ளது. அதில் 8,17,962-த்திற்கான பில் ஏற்புடையதாக இளைய என்றும் தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் மாணவர் இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை முழுமையாக கோரியுள்ளார். ஆனால் தமிழக அரசு கல்வி கட்டணம் மற்றும் வாழ்க்கை செலவினங்களுக்கு மட்டும் 12 லட்சம் செலுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவர் ஆராய்ச்சி செலவினங்களுக்காக ரூ.19.50 கோரியுள்ளார். கடந்த ஆண்டிற்கான பில் சரிவர கிடைக்கததால் ஆராய்ச்சி செலவினங்களுக்கான இந்த தொகையை உறுதி செய்ய மாணவர் பயிலும் பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளது தமிழக அரசு.

 research scholar bharathidasan

இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் மாணவர் வீடியோ பதிவிட்டு விவாதங்கள் எழுந்தன. எதிர்க்கட்சி மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை தொடர்ந்து மாணவர் பாரதிதாசனுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.23.95 லட்சமும், வாழ்க்கை செலவு மற்றும் ரிசர்ச் மெட்டீரியல் வாங்க மாணவர் பாரதிதாசனுக்கு ரூ.17.30 லட்சத்தை விடுவித்துள்ளது சமூக நீதித்துறை.

நடப்பு கல்வி ஆண்டுக்கு ஏற்கனவே ரூ. 12.21 லட்சம் நேற்று ரூ.23.95 லட்சம் என மொத்த கல்வி உதவித் தொகையும் ஆராய்ச்சி விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு அனுமதிக்கப்பட்ட 36 லட்சத்தை முழுமையாக பெற்றுள்ளார் மாணவர் பாரதிதாசன். இதற்கிடையில் சமூகவலைத்தகளில் ஒரு தரப்பினர், மாணவர் தவறான வகையில் இத்திட்டத்தை பயன்படுத்துகிறார் என்றும் மடிக்கணினி, ஷூ வாங்கிய பில் போன்றவை விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் இதன் பின்னால் எதிர்க்கட்சி உள்ளது.. என்றும் பேசப்பட்டது. அதை மறுத்த மாணவர் பாரதிதாசன் என்னை யாரும் இயக்கவில்லை.. இது எனது உரிமை அதை நான் பெற யாருடைய தலையிடும் தேவையில்லை என்று பதிலளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com