இன்று காலை சி.வி. சண்முகம் உட்பட அதிமுகவின் முக்கிய புள்ளிகள் சிலரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக திமுக-வுடன் கூட்டணியில் இருக்க கூறியதாகவும், அதனால் தலைமை பொதுக்குழுவை கூட்டுமாறும், தவெக-வை ஆதரிக்க போவதாகவும், வேறு எந்த கட்சிகளுடனும் கூட்டணி இல்லை என்றும் கூறினார்கள். இதனைத்தொடர்ந்து, தற்போது அதிமுக தனது X தளப்பக்கத்தில் காட்டமாக விமர்சித்துள்ளது.
இன்று காலை, சி.வி. சண்முகம், விஜய பாஸ்கர், எஸ்.பி. வேலுமணி உட்பட அதிமுக நிர்வாகிகள் சிலர் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தனர். அதிமுக இரண்டாக பிளவு பட வில்லை என்பதை எஸ்.பி. வேலுமணி கூறினார். மேலும், கடந்த சில நாட்களாக அதிமுக இரண்டாக பிரிந்ததாக பல வதந்திகள் பரவின. அதற்கு ஏற்றாற்போல் அதிமுகவினர் சி.வி. சண்முகம் தலைமையில் சிலரும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிலரும் இருந்தனர். மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, சட்டப்பேரவைக்கு தனி தனி தலைமையின் கீழே வருகை புரிந்தனர். தற்போது, X தளத்தில் அதிமுக கடுமையாக சி.வி. சண்முகம் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கடுமையா சாட்டியுள்ளது.
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!. திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?. அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?. அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?. பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?. கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?. 1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக! அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?. நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்?. உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!. எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்! எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!. இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம். இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது. இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்! -தலைமைக் கழகம் என்று ஒரு விமர்சித்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.