M K Stalin Statement 
தமிழ்நாடு

“பெண்கள் மீது புகார் வந்தும் நடவடிக்கை இல்லை.." - தவெக அரசை சாடிய ஸ்டாலின்! ஜெம் வீரமணி விவகாரத்தில் பரபரப்பு பதிவு

பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள்

Vinvizhi Leninton

ஜெம் வீரமணி விவகாரத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X தளப்பாக்கத்தில் ஒருபதிவினை பதிவிட்டுள்ளார். மேலும், திமுகவின் நிலைப்பாடு குறித்தும், தவெக-வில் பொறுப்பில் இருப்பவர்கள் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு அரசு எந்த ஒரு நடவடிக்கைக்கு எடுக்காதது குறித்தும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ithukuriஇதுகுறித்து மு.க. ஸ்டாலின் கூறியதாவது, "சிறுமிகளுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற இழிவான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வீரமணியும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள் எவராயினும், எத்தகைய பொறுப்பில் இருந்தவர்கள் ஆயினும் தப்பிக்க கூடாது. அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதிகபட்ச தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும்.

இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு. இந்த வழக்கின் முடிவு, இனி இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணமே எவருக்கும் வராத வகையில் அமைய வேண்டும் என்பதுதான் ஓர் அரசியல் இயக்கத்தின் தலைவனாகவும், ஒரு குடும்பத்தலைவனாகவும், மனசாட்சி உள்ள மனிதனாகவும் எனது விருப்பம்.

ஆனால், இந்த வழக்கில் தேவையே இல்லாமல், குறுகிய அரசியல் நோக்கத்துடன் திமுக மீது பொய்யாக அவதூறுகளைப் பரப்பி, ஒரு கூட்டம் குளிர்காய்ந்து வருவது மிகவும் அருவெறுப்பான செயலாகும். வீரமணி வழக்கில் யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை.

பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாரபட்சமின்றி குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு, தண்டனை பெற்றுத் தரப்பட்டது. இவை அனைத்தும் பொதுவெளியில் இருக்கும், மறுக்க முடியாத உண்மைகள் ஆகும். எவரையும் காப்பாற்ற வேண்டிய தேவை கழக ஆட்சிக்கு இல்லை.

தற்போதைய த.வெ.க. ஆட்சியில் நடப்பதுபோல, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது அனைத்துப் பத்திரிகைகளின் முன்பும் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த பின்னரும், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் பேசி வழக்கை முடித்து வைக்கும் இழிசெயல்கள் கழக ஆட்சியில் நடைபெறவில்லை.

எனவே, சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரத்தை இடைத்தேர்தலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் இழிவான செயலையும், முற்றிலும் பொய்யான அவதூறுகளை ஊடகங்கள் மூலமாக பரப்புவதையும் ஆளும்கட்சியினர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி பெற்றுத் தருவது மட்டுமே நம் அனைவரின் நோக்கமாகவும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ X தளப்பாக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்