இந்த ஆண்டின் சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று கடலூரில் உள்ள பாசர் தேசிய நெடுசாலையில் தேமுதிக நடத்திய “மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0” நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்ட நிலையில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்கள் ஆகியோர் சாலையில் இருந்து மேடைக்கு ரோடு ஷோ போல வந்து மாநாட்டில் கலந்துகொண்டனர்.
ஏற்கனவே பிரேமாலாதா இந்த மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்த நிலையில் மேடையில் பேசிய அவர் “கடலூர் எப்போது விஜயகாந்தின் கோட்டை ரசிகர் மன்றமாக தொடங்கி இன்று தேமுதிகவாக வளர்ச்சியடைந்திருக்கிறது, உங்கள் ஒவ்வொருவர் முகத்திலும் நான் கேபட்டனை பார்க்கிறேன். அவர் இல்லாமல் இன்று நம்மால் இந்த நிலையில் இருக்க முடியாது. மற்ற கட்சிகளை போல இல்லை நமது தேமுதிக பணம் கொடுக்காமல் இன்று தொண்டர்கள் இங்கு கூடியிருக்கின்றனர்.
தேமுதிக மாநாட்டிற்கு மக்கள் கூடுவதற்கு காரணம் கேப்டன் என்ற ஒரு பெயராலும் பாசத்தாலும் தான், யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற முடிவு எடுத்தாகிவிட்டது, ஆனால் அதை இந்த மாநாட்டில் சொல்ல வேண்டுமா என்பதுதான் தற்போது என்னுடைய கேள்வி? ஏனென்றால் இன்று வரை எந்த கட்சிகளும் தங்களது கூட்டணி குறித்து அறிவிக்கவில்லை ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சிகளும் தங்களது கூட்டணியில் எந்த கட்சிகள் இருக்கிறது என்பது குறித்து முறையாக இன்னும் அறிவிக்கவில்லை.
எனவே நாம் மட்டும் என் அவசர பட வேண்டும், சிந்தித்து நல்ல கூட்டணியை நீங்கள் விரும்பும் கூட்டணியை அறிவிப்போம். தேமுதிகவை யார் மதிக்கிறார்களோ? தேமுதிகவின் தொண்டர்களை யார் மதிக்கிறார்களோ அவர்களுடன் தான் கூட்டணி வைப்போம். தேர்தல் வந்துவிட்டாலே பேரம் பேசுகிறோம் பேரம் பேசுகிறோம் என்கிறார்கள். ஆம் நான் பேரம் பேசுகிறேன் யாருடன் நமது கட்சி செயலாளர்களிடம் கடைக்கோடி தொண்டன் இடம் பேசுகிறேன் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்று. தேமுதிகவின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாது விரைவில் கூட்டணியை அறிவிப்போம்” என தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.