2026 தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் வேலைகளை அனைத்து கட்சிகளும் துவங்கிவிட்டன. திமுக தனது கூட்டணி குறித்து மிகத்தெளிவானை போக்கை கொண்டுள்ளது. ஆனால் அதிமுக -வில் இன்னும் அந்த நிலையற்ற தன்மை தொடர்கிறது.
அதிமுக -பாஜக கூட்டணி!
விஜய் -ன் அரசியல் பிரவேசம் தமிழ்நாடு அரசியல் களத்தில் உண்மையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்ல வேண்டும். பெரும்பான்மை இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள தவெக பகிரங்கமாக திமுக -வை சாடி வருகிறது.
“எதிரிக்கு எதிரி நண்பன்" என்பது போல விஜயுடன் கூட்டணி வைக்கவே எடப்பாடி விரும்பினார். ஆனால் விஜய் இதற்கு இசைந்து கொடுப்பதாக தெரியவில்லை எனவே வேறு வழி இல்லாமல் பாஜக -வுடன் கூட்டணி வைத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதிமுக கூட்டணிக்கான விலைதான் “அண்ணாமலை பதவி விலகளுக்கு” காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனாலும் எதுவுமே இல்லாத பாஜக -விற்கு அதிமுக -வின் கூட்டணி கிடைத்ததே பெரும் லாபம் தான்.
தேமுதிக -வை அலைக்கழிக்கும் எடப்பாடி!
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக -வுடன் கூட்டணியில் இருந்த ஒரே கட்சி தேமுதிக தான். ஏற்கனவே பேசி வைத்தபடி தேமுதிக -விற்கு ஒரு மாநிலங்களவை எம்.பி சீட்டை பெறுவோம் என பிரேமலதா உறுதியாக நம்பினார். ஆனால் தேமுதிக -விற்கு வழங்கப்படும் எம்.பி சீட் குறித்த கேள்விக்கு நாங்கள் அப்படி ஒன்றும் சொல்லவில்லை என்றார். .
2.59% வாக்குகள் மட்டுமே தேமுதிக -விடம் உள்ளன. ஆகையால் கூட்டணியில் இவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒரு பிரச்சனையும் இல்லை என்ற போக்கிலே இ.பி.எஸ் இருந்தார். இதனால் தேமுதிக நிர்வாகிகள் அதிமுக மீது செம கடுப்பில் இருந்தனர்.
போட்டு உடைத்த பிரேமலதா!
இன்று தேமுதிக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய பிரேமலதா, ‘மண்டல வாரியாக நாங்கள் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்த உள்ளோம். இதற்கு பிறகு தமிழ்நாடு முழுக்க நானும் விஜய பிரபாகரனும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளோம். அதனை பிறகு ஜனவரி 9 கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது. அதிலிருந்து தேர்தல் பணிகள் மிக துரிதமாக நடைபெறும் என்று அறிவித்தார்.
தனித்து போட்டி!
கூட்டணியில் சிக்கல் நிலவுவதால் தனித்து போட்டியிடும் வாய்ப்பு உண்டா எனக்கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரேமலதா “தமிழ்நாட்டு தேர்தல் வரலாற்றில் தனித்து போட்டியிட்டு வெற்றி கண்டவர் கேப்டன் விஜயகாந்த். அவரை முன்னுதாரணமாக கொண்டு சீமானும் செய்யப்பட்டு வருகிறார். விஜய் -ன் அரசியல் நகர்வுகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2036 சட்ட மன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுமா? என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்லும்.
பொறுத்தார் பூமி ஆள்வார்!
ராஜ்யசபா சீட் தருவதாக அவர்கள் தான் சொன்னார்கள். “5 லோக் சபா சீட் ஒரு ராஜ்யசபா சீட் என்ற ஒப்பந்தத்திற்கு எடப்பாடிதான் ஒப்புக்கொண்டார். ஆனால் வருடன்ம் குறிப்பிடவில்லை. அப்போதே நாங்கள் எழுத்து பூர்வமாக கேட்டோம். “எழுதி தரும் வழக்கம் இல்லை, என் வாக்கு தான் முக்கியம்” என எடப்பாடி சொன்னதை நம்பினோம். எடப்பாடி கையெழுத்திட்ட கடிதம் எங்களிடம் உள்ளது. அரசியல் கண்ணியம், நாகரிகம் கருதி நாங்கள் அதை உங்களுக்கு காட்டவில்லை.
எடப்பாடி, “எம்.பி சீட் தருவதாக நாங்கள் சொல்லவில்லை" எனக்கூறிய போது தேமுதிக -வின் கடைகோடி தொண்டர் வரை அதிர்ச்சிக்குள்ளாகினர், இந்த சம்பவத்திற்கு பிறகு அதிமுக -வின் சில அமைச்சர்கள் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, “எடப்பாடி எதோ டென்ஷனில் பேசிவிட்டார்” எனக்கூறினார். அரசியலில் பொறுமை தான் மிக முக்கியம். “பொறுத்தார் பூமி ஆள்வார்” அடுத்த ஆண்டு சீட் தரவுதாக சொல்லியிருக்கின்றனர். பாப்போம்… என அவர் பேசியிருந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.