தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 6,574 பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது
இந்த தேர்வுக்கு தகுதியானவர்கள் மற்றும் விருப்பமுள்ளவர்கள் 2026 நவம்பர் 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய நவம்பர் 9 முதல் 11-ஆம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்படும். இதற்கான எழுத்து தேர்வு 2027 ஜனவரி 10-இல் நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. விண்ணப்பப் பதிவு அக்டோபர் 6 ஆண்டு தொடங்கி.. நவம்பர் 5 வரை முடிவடையும்.
இந்த ஆண்டு குரூப் 4 தேர்வில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான காலியிடங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6,574 கலி பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருப்பது போட்டித்தேர்வர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குரூப் 4-ல் பெரும்பாலான பணிகளுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும். ஆனால் பதவியைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடும். இந்த தேர்வுக்கான வயது வரம்பு பதவிக்கு ஏற்ப மாறுபடும். குறிப்பாக 18 வயது முதல் வயது மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது தளர்வு வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் முன் சம்பந்தப்பட்ட பதவிக்கான குறிப்பிட்ட வயது மற்றும் கல்வித் தகுதிகளை சரிபார்த்து அதற்கான ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
எழுத்துத் தேர்வு முறையில் நடைபெறும் குரூப் 4 தேர்வில் தமிழ் மொழி, பொது அறிவு மற்றும் திறனறிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும். தமிழ்மொழியில் 100 கேள்விகளும், பொது அறிவுப் பகுதியில் 75 கேள்விகளும் மற்றும் திறனறிவு பகுதியில் 25 கேள்விகளும் இடம் பெறும் வகையில் தேர்வு அமைப்பு உள்ளது. அதற்கான சம்பளம் பதவிக்கு ஏற்றவாறு பல்வேறு படிநிலையில் வழங்கப்படுகிறது. ₹16,600 முதல் தொடங்கி அதிகபட்சமாக ₹52,400 வரையான சம்பள படிநிலைகள் உள்ளது.
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க TNPSC (தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரியான பிரிவில் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் அதற்கான தேர்வு அறிவிப்பு கோப்புகளை (PDF) ஒரு முறை முழுமையாக படித்து பார்ப்பது நல்லது.
தேர்வர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை:
குரூப் 4 தேர்வு நாள்: 10.01.2027 தேர்வு (நேரம்; 9.30 AM முதல் 12.30 PM வரை)
விண்ணப்பம் தொடங்கிய நாள் – 06.10.2026
விண்ணப்பிக்க கடைசி நாள் – 05.11.2026 (11.59PM வரை)
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: புகைப்படம், கையொப்பம், மதிப்பெண் பட்டியல், வகுப்பு சான்றிதழ், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் உள்ளிட்ட தேவையான விவரங்கள். மேலும் தட்டச்சு சுருக்கெழுத்துத் தகுதி பெற்ற சான்றிதழ்கள்.
விண்ணப்பிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என் கடைசி நாள் வரி காத்திருக்க கூடாது. கடைசி நேரத்தில் இணையதளத்தில் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க, தகுதியுள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பிப்பது சிறந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்