தமிழ்நாடு

3 ரெட்டி சகோதரர்களை நம்பித்தான் ஆட்சியா? "ஸ்லீப்பர் செல் ஆட்சி" - தவெகவை கடுமையாக சாடிய முன்னாள் அமைச்சர் ரகுபதி

மக்கள் மனதில் ஏண்டா தவெக-விற்கு வாக்களித்தோம் என்ற சங்கடம் 5 மாதங்களாக ஏற்பட்டுள்ளது.

Muthu Lakshmi

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  பிள்ளை மங்கலத்தில் நிழற்குடையையும் துளையானூர் மற்றும் அண்டக்குடிப்பட்டியில் கலையரங்கத்தையும் இளஞ்சாரூரில் சுகாதார வளாகத்தையும் திறந்து வைத்த முன்னாள் அமைச்சரும் திருமயம் தொகுதி எம்எல்ஏவுமான எஸ் ரகுபதி இளஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த ஐந்து மாத காலத்தில் எந்த ஒரு புதிய திட்டங்களும் வரவில்லை அறிவிப்பு மட்டுமே வருகிறது அறிவிப்பை நிறைவேற்ற ஆயத்த பணிகள் கூட நடைபெறவில்லை. ஐம்பதாயிரம் கோடி கடன் வாங்கியதாக கூறினார்கள். தற்போது 2 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கி இருப்பதாக கூறுகிறார்கள்.ஒரு யூனிட்டை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால், மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

தவெக அரசு ஒன்றிய அரசை பகைத்துக் கொள்ளாது. காங்கிரஸ் கட்சியையும் பகைத்துக் கொள்ளாது. பாலுக்கு காவல் புண்ணைக்கு தோழன் என்ற வகையில் தான் இந்த அரசின் நிலைப்பாடு இருக்கிறது. தவெக ஒன்றிய அரசின் ஸ்லீப்பர் செல்லாக கடந்த தேர்தலில் இருந்திருக்கிறார்கள். எங்கெங்கெல்லாம் SIR-ல் 80,000 வாக்குகள் நீக்கப்பட்டதோ அங்கெல்லாம் தவெக வெற்றி பெற்று இருக்கிறது. குறிப்பாக சென்னை செங்கல்பட்டு ராணிப்பேட்டை திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். எஸ்ஐஆரை எதிர்க்கக்கூடிய தைரியம் தவெகவுக்கு கிடையாது. எஸ்ஐஆரால் வெற்றி பெற்றது தவெக.

மக்கள் மனதில் ஏண்டா தவெக-விற்கு வாக்களித்தோம் என்ற சங்கடம் 5 மாதங்களாக ஏற்பட்டுள்ளது. தைரியமாக பொய் பேசக்கூடிய அமைச்சர்களை கொண்டுள்ள அமைச்சரவை இந்த அமைச்சரவை தான். எந்த பொய்யை வேண்டும் என்றாலும் சொல்லலாம் மக்கள் நம்புவார்கள் என்று நம்பிக்கையோடு இருக்கக்கூடியவர்கள் இவர்கள். ஆர்டிபிசியல் இன்டெலிஜென் மூலமாக நடந்து வரும் ஆட்சி தான் தவெக ஆட்சி.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தில் இருப்பதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் தவெக கட்சியை சேர்ந்தவர்கள் தான். கடந்த ஆட்சியையும் இந்த ஆட்சியையும் ஒப்பிட்டால் நாங்கள் கட்டுப்படுத்தினோம். 

தவெக ஒரு ஜோதிடரரையும் மூன்று ரெட்டி சகோதரரையும் நம்பி ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தான்தான் எல்லாம் என  எண்ணி வருகிறார். ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி. ஆள் வளர்ந்திருக்கிறார் அறிவு வளரவில்லை அறிவு வளர்ந்ததாக தெரியவில்லை.. அவர் அறியாமையால் பேசி வருகிறார்.

எஸ்ஐஆரில் குறைந்த வாக்குகளை நீக்கிய இடத்தில் ஏன் தவெகவால் வெற்றியடைய முடியவில்லை. தற்போது தைரியம் இருந்தால் தேர்தல் நடத்தட்டும் அப்படி தேர்தல் நடத்தினால் ஆட்சியை பிடித்துக் காட்டக்கூடிய தைரியம் திமுகவுக்கு மட்டும்தான் உண்டு. வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. மோடியின் சிலீப்பர் செல் தான் தவெக. அதற்குப் பிறகு மோடியிடம் கோரிக்கை வைத்தால் என்ன கோரிக்கை வைக்கவில்லை என்றால் என்ன. மோடியிடம் தைரியமாக கோரிக்கைகளை கேட்டவர் எங்கள் தலைவர் முக ஸ்டாலின் தான். 

பாஜகவை திமுக ஆதரித்து இருந்தால் ஆட்சியை இழந்திருக்க மாட்டோம். எங்களை தூக்கி சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்திருப்பார்கள். பாஜகவை இந்தியாவிலேயே எதிர்த்த ஒரே இயக்கம் திமுக தான். எங்களைப் போன்று எதிர்த்தவர்கள் யாரும் இல்லை. மற்றவர்களெல்லாம் ஏதோ ஒரு இடத்தில் சமரசம் செய்து கொள்வார்கள். சமரசத்திற்கு இடம் கொடுக்காமல் ஒன்றிய அரசை எதிர்த்த ஒரே இயக்கம் திமுக தான். ஆட்சியில் இருந்த போதும் எதிர்த்தோம் இன்றும் அதே நிலைப்பாட்டுடன் தான் இருக்கிறோம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.