தமிழ்நாடு

இறைச்சி வாங்கித் தராததால் சஸ்பெண்ட்? - தொடர்ந்து துன்புறுத்தினார நீதிபதி?.. மன உளைச்சலில் பணியாளர் தற்கொலை!

அப்பா என்னை கொடுமை படுத்துறங்க. கேட்ட வார்த்தையால ஏசுராங்க பா

Mahalakshmi Somasundaram

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் 33 வயதான நாகராஜன், இவருக்கு திருமணமாகி உமா மகேஸ்வரி என்ற மனைவியும், தர்ஷன் என்ற இரண்டரை வயது குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில் இவர் வேலை செய்யும் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கு பல்கலை செல்வன் என்ற நீதிபதி, தொடர்ந்து இவரை வேலை நேரத்தில் அவதூறாக பேசியும், சாதிப்பெயரை சொல்லி திட்டியும் துன்புறுத்தி வந்துள்ளார்.

கடந்த (மே 10&11) சனி ஞாயிறு என இரண்டு நாட்கள்  முறையே விடுமுறை கடிதம் எழுதி கொடுத்து விட்டு விடுப்பு எடுத்துள்ளார். ஆனால் ஞாயிறு அன்று நாகராஜன் வீட்டிற்கு சென்ற ஒரு பெண் நீதிபதிக்கு இறைச்சி வாங்கி வந்து கொடுக்க சொல்லியிருக்கிறார். வண்டி இல்லாததால் நாகராஜன் இறைச்சி வாங்கிக் கொண்டு செல்லாமல் இருந்திருக்கிறார்.

திங்களன்று வழக்கம்போல் பணிக்கு சென்ற நாகராஜனுக்கு நீதிபதி பணியிடை நீக்கம் கடிதத்தை கொடுத்துள்ளார். வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்ற நாகராஜன் வெகு நேரமாகியும் வெளியே  வராததால் அறையின் கதவை திறந்த பார்த்தால் , மனமுடைந்த நாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நாகராஜன் அவரது தந்தைக்கு பேசி வெளியிட்ட சில ஆடியோக்கள் வெளியகியுள்ளது.  அதில் “அப்பா என்னை கொடுமை படுத்துறங்க பா, கேட்ட வார்த்தையால ஏசுராங்க பா, நீங்க குடுத்த தைரியத்துல தான் நான் இருக்கேன் பா எனக்கு பயமா இருக்கு பா, என் கண்ணீரை துடைக்க உங்களால தான் முடியும் பா” என கண்ணீர் மேலாக பேசியுள்ளார்.

அவரது மனைவி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “எனது கணவரின் மரணத்திற்கு நீதிபதி தான் காரணம் ஒருநாள் விடாமல் அவர் என் கணவரை அவதூறாக பேசியும் “இந்த சாதில பொறந்துட்டு இவ்ளோ நீட்டா வர” என சாதி பெயரை சொல்லி துன்புறுத்தி இருக்காரு” என்று சொல்லி முதலமைச்சர் தான் இதற்கு நீதி வாங்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்