டித்வா புயல் காரணமாக தொடர்ந்து மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிலையில் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னைக்கு 40 கிமீ தொலைவிலும் புதுச்சேரிக்கு 25 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நாளை ஈரோடு, நீலகிரி, கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சேலம், நாமக்கல், திருப்பூர்,திண்டுக்கல்,தேனீ, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து மழை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய மேகக்கூடங்களால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது இதன் காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை சென்னை திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மூன்று மாவட்டங்களிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டஜடர்ந்து சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் மாவட்ட நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இரண்டு நாட்களாக விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தந்த நாட்களில் நடைபெற இருந்த தேர்வுகள் தேதியின்றி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளையும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் நாளை நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது சென்னை பல்கலைக்கழகத்திலும் நாளை நடக்க இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.