தவெக அரசு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்தையும் செய்ய அவர்களுக்கு கால அவகாசம் தர வேண்டும் கோவை விமான நிலையத்தில் மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ பேட்டி
கோவையில் நடைபெற்ற திருமண விழா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மதிமுக கழக முதன்மை செயலாளர் துரை வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர், மின்சாரத் துறை அமைச்சர்கள், அதிகாரிகள், மின்சார துறையில் உள்ள பல்வேறு இடையூறுகளை நீக்கி, இடையூறுகள் ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் “டெண்டர் சம்பந்தமான ஆர்டிஸ்ட் தொலைந்ததற்கான காரணங்களை காவல்துறை கண்டறிய வேண்டும்” எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
விவசாய பயிர் கடன் தள்ளுபடி குறித்து பேசிய துரை வைகோ “துறை சார்ந்த அமைச்சரவை சார்ந்த விளக்கம் கொடுத்துள்ளார்கள் முதல்வர் விஜய் அவர்களும், விளக்கம் கொடுத்திருக்கிறார்கள், விவசாய கடனை பொறுத்தவரை ஆட்சி ஏற்றபின் நிதி நிலைமை கருத்தில் கொண்டு, சிறு குறு விவசாயிகள் ஐம்பதாயிரம் வரை தள்ளுபடி செய்ய முடியும் என்பதே உறுதியான நிலை என்றார். தவெக ஆட்சியமைத்தால் அடுத்த நாளே அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார் விஜய் ஆனால் இதுவரை செய்யவில்லை என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, “ஒருவர் முதல்வர் ஆட்சி பொறுப்பு ஏற்று மூன்று வாரங்கள் தான் ஆகியுள்ளது, அவர் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளை சீரமைக்க நாமும் சில நாட்கள் கால அவகாசம் தர வேண்டும்” என்றார். சில காரணங்களால் தமிழகத்தில், போதைப் பழக்கம், உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இனி வருகின்ற காலங்களில் கண்டிப்பாக போதை கலாச்சாரத்தை குற்ற சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார்கள் என நம்புவோம் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த பத்து வருடங்களாக நாங்கள் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருக்கிறோம் நாங்கள் இப்பொழுதும் அதில் தான் இருக்கிறோம்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திமுக சின்னத்தில் நாங்கள் போட்டியிட்டோம், தற்பொழுதும் திமுக உடன் தான் பயணிக்கிறோம் என்றார். கடந்த காலங்களில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருந்ததோ, அதே போல தான் இப்போதும் உள்ளது. 100% குற்ற சம்பவங்கள் இல்லாமல் உருவாக்க முடியாது என்றார்.
கடந்த திங்கட்கிழமை அன்று திருச்சியில், “திமுக சின்னத்தில் போட்டியிட்டது துரதிஷ்டம்” என துறை வைகோ கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதுகுறித்து பேசிய அவர் நான் சொன்னது வாஸ்தவம் தான், ஒரு கட்சியின் சின்னமும், கொடியும் அக்கட்சியின் அடிப்படை அடையாளம், அப்படி ஒரு கட்சி அதனுடைய சின்னத்தில் நிற்காமல், வேறொரு கட்சியின் சின்னத்தில் நிற்பது, தன்னுடைய தனித்துவத்தை இழப்பதாகும் என தெரிவித்தார். மேலும் நான் சொன்னதில் எந்த தவறும் இல்லை என்றும் இன்னும் 1000 முறை கூட சொல்வேன் என்று தெரிவித்தார். எதிர்காலத்தில் வேரோடு சின்னத்தில் நிற்க மாட்டோம் என்பதே எங்கள் நிலைப்பாடு, பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் இது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் குறிப்பிட்டார். அப்படி போட்டியிட்டு இருந்தாலும் தவெக-விற்கு ஆதரவு தெரிவித்திருக்க மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்