நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணங்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன், அவரது குடும்பத்தில் உள்ள 8 பேருடன் மதுரையில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று, திருவிழா முடிந்த நிலையில் நேற்று இனோவா காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அதே போல் நெல்லை டக்கரம்மாள்புரத்தை சேர்ந்த தனிஸ்லாஸ்,அவரது மனைவி,மகன்,மருமகள்,பேரப்பிள்ளைகள் என குடும்பத்துடன் சொந்த ஊரான கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள, திங்கள்சந்தைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்துள்ள தளபதிசமுத்திரம் நன்கு வழி சாலையில் வந்த இரண்டு கார்களில், மதுரைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த மாரியப்பன் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்ததால் , சாலையின் குறுக்கே இருந்த சென்டர் மீடியத்தை தாண்டி, தனிஸ்லாஸ் வந்த காரின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் இரண்டு பேரும், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இரண்டு பெரும் என, நான்கு பேரும் உயிரிழந்தனர், மேலும் காயமடைந்த 12 பேர் நாகர்கோவில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மூன்று பேர் உயிரிழந்தனர்.
தனிஸ்லாஸ் குடும்பத்தில், தனிஸ்லாஸ் உட்பட ஐந்து பேரும், மாரியப்பன் குடுப்பதில் இருவரும் என மொத்தம் இந்த கோர விபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளது. அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்