“வெட்டிக்கொல்லப்பட்ட திமுக நிர்வாகி” - யார் அந்த மூன்று பேர் கொண்ட கும்பல்?

தோட்டத்திற்கு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல்.
praveen kumar
praveen kumar
Published on
Updated on
1 min read

சிவகங்கை அடுத்துள்ள சாமியார் பட்டி கிராமத்தை சேர்த்தவர் முத்துகிருஷ்ணன். இவருக்கு  27 வயதில் பிரவீன் குமார் என்ற மகன் இருக்கிறார். பிரவீன் குமார், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராகவும், ஒப்பந்ததாரராகவும் பணி செய்து வருகிறார்.

மேலும் தந்தைக்கு உதவியாக, அவ்வப்போது வயல் வேலைகளையும் செய்து வந்துள்ளார்.நேற்று மதியம் தனது வீட்டின் பின்புறம் சுமார் 2 கி.மீ தூரமுள்ள தோட்டத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வேலை பார்த்துள்ளார். அப்போது தோட்டத்திற்கு, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல். பிரவீன்குமாரை ஆயுதத்தால் சராமாரியாக வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச்  சென்றுள்ளனர். 

இதனை அடுத்து பிரவீன் குமாருடன் இருந்த நண்பர்களும்  உறவினர்களுக்கும், காவல்துறைக்கு, இது குறித்து  தகவல் தெரிவித்துள்ளனர், மேலும்  உறவினர்களின் காரில் பிரவீன்குமாரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரவீன்குமார் உயிரிழந்துள்ளார். 

இதனை அடுத்து பிரவீன்குமாரின் உடல், பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு குவிந்த உறவினர்கள் பிரவீன்குமாரின் உடலை, பிரேத பரிசோதனை செய்ய விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமாரின் மாமா,  பிரவீன் இறப்பிற்கு காரணம், மெத்தனமாக செயல்பட்ட காவல்துறையினரே எனவும். கிராமத்தில்  பெண்களிடம் தவறாக நடந்து கொண்டும். கொள்ளை அடித்து கொண்டும் இருந்தவர்களை பற்றி இதுவரை பிரவீன்குமார் மற்றும் ஊர் மக்கள் கிட்டத்தட்ட 15 முறை புகாரளித்தும். எந்த முறையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 

அவர்கள் இதுவரை, பிரவீன் குமாருக்கு ஐந்தாறு முறை கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.மேலும் இரண்டு முறை கொலை முயற்சியும் செய்துள்ளனர்.நேற்று மூன்றாவது முறையாக முயற்சி செய்த அவர்கள் பிரவீன் குமாரை கொலை செய்து விட்டனர். இப்போதாவது இதுகுறித்து காவல்துறையினர்,  விசாரணை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com