தமிழ்நாடு

ஒட்டன்சத்திரம்.. சக்கரபாணியின் 'அசைக்க முடியாத' கோட்டை! 30 ஆண்டு ஆதிக்கத்தை வீழ்த்துமா அதிமுக? மாலை முரசு - கான்சிலிடிக்ஸ் கணிப்பு!

சுமார் 5% முதல் 6% வித்தியாசத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி மீண்டும் திமுக வசம்

மாலை முரசு செய்தி குழு

"மாலை முரசு - கான்சிலிடிக்ஸ்" இணைந்து தமிழகம் முழுவதும் நடத்திய மாபெரும் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து "Tamil Nadu Political League" நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் தொகுதி பற்றியும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அங்கு வெற்றிப் பெற அதிகம் வாய்ப்புள்ள கூட்டணி எது? என்பது குறித்த தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் அடையாளங்கள்:

இங்கு 11.7% இளம் வாக்காளர்கள் உள்ளனர். 80 வயதுக்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் 2.7% ஆக உள்ளனர், இது மற்ற தொகுதிகளை விட அதிகம். சமூகக் கட்டமைப்பில் வேளாள கவுண்டர்கள் 42%, தேவேந்திர குல வேளாளர்கள் 18%, முஸ்லிம்கள் 8%, முக்குலத்தோர் 8%, மற்றும் செட்டியார்கள் 7% என உள்ளனர்.

உள்ளூர் பிரச்சனைகள்:

புகழ்பெற்ற ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு வரும் வாகனங்களால் திண்டுக்கல் - தாராபுரம் சாலையில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசல் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. ஆரம்பச் சுகாதார நிலையங்களில் போதிய மருந்து இருப்பு இல்லாமை மற்றும் ஏரி குளங்கள் முறையாகத் தூர்வாரப்படாதது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

ஒட்டன்சத்திரம் தொகுதி பற்றிய முழு கருத்து கணிப்பை காணொளியாக காண : இங்கே கிளிக் செய்யவும்

தேர்தல் வரலாறு:

கடந்த 30 ஆண்டுகளாகத் திமுகவின் சக்கரபாணி அவர்களே இங்கு எம்எல்ஏ-வாக உள்ளார். 2021-ல் 54.9% வாக்குகளைப் பெற்ற திமுக, 2024-ல் 63.6% ஆகத் தனது பலத்தை உயர்த்தியுள்ளது. அதிமுக 2021-ல் 40.5% பெற்றிருந்தது, 2024-ல் 29.5% ஆகக் கடுமையாகச் சரிந்தது. நாம் தமிழர் 5% வாக்குகளைப் பெற்றுள்ளது.

2026 கணிப்பு:

2026-ல் திமுக 115 பூத்களில் வலுவாக இருக்கும் எனத் தெரிகிறது. அதிமுக 95 பூத்களில் ஸ்ட்ராங்காக உள்ளது. 60 பூத்கள் ஸ்விங் நிலையில் உள்ளன. கணிப்பின்படி, திமுக 38% வாக்குகளையும், அதிமுக 32% வாக்குகளையும் பெறும். விஜய் மற்றும் நாம் தமிழர் கூட்டணி 26% வாக்குகளைப் பிரிக்கும். சுமார் 5% முதல் 6% வித்தியாசத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதி மீண்டும் திமுக வசம் (சக்கரபாணி வசம்) செல்லவே அதிக வாய்ப்புள்ளதாகக் கான்சிலிடிக்ஸ் குழு தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.