tvk vijay 
தமிழ்நாடு

“நம்ம அடுத்த அடி நிதானமா இருக்கனும்” - மெல்ல மெல்ல தலைதூக்கும் தவெக!! நவம்பர் 5ஆம் தேதி நடக்கிறது சிறப்பு பொதுக்குழு கூட்டம்!!

நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடர் அமைதிக்குப் பிறகு, உங்களோடு ....

மாலை முரசு செய்தி குழு

வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும்  மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர்.  இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

ஆனால் அது விஜய் -க்கு எந்த விதத்திலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் பாதிக்கப்பட்டவர்களே விஜய் -க்கு ஆதரவாக இருப்பதுதான். நேற்றைய முன்தினம் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பனையூருக்கு  வரவழைத்து ஆறுதல் சொல்லியிருந்தார்.  இந்நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்புப் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 5ஆம் தேதி நடக்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். தவெகவின் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் மற்றும் முடிவுகள் எடுக்க இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டப்படுவதாக கூறியுள்ள விஜய், தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்றும் பேசப்படுகிறது.

இந்நிலையில்  விஜய் தனது அரசியல் பணிகளை வேகப்படுத்தி இருக்கிறார். ஏற்கனவே தவெக தரப்பில் நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த நிலையில் தவெகவின் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் குறித்த முடிவு எடுப்பதற்காக சிறப்பு பொதுக்குழுவை விஜய் கூட்டி உள்ளார்.

இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் அரசியல் பயணத்தில் அர்த்தம் பொதிந்த ஓர் ஆழ்நீள் அடர் அமைதிக்குப் பிறகு, உங்களோடு பேசவும் உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம் இது. சூழ்ச்சியாளர்கள், சூதுமதியாளர்கள் 'துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும், அச்சமின்றி அத்தனையையும் உடைத்தெறிந்துவிட்டு நம் அன்னைத் தமிழ்நாட்டு மக்களுக்காக ஆர்த்தெழ வேண்டிய தருணம் இது.

தமிழக வெற்றிக் கழகத்தின் படைக்கலன்களாக நீங்கள் இருக்கையில், நம்மைக் காக்கும் கவசமாக நம் தமிழ்நாட்டு மக்கள் இருக்கையில், அவர்களோடு நமக்குள்ள உறவை, அவர்களுக்கான குரலாகத் தொடரும் நம் வெற்றிப் பயணத்தை எவராலும் தடுக்க இயலாது. இதை நாம் சொல்ல வேண்டியதே இல்லை. கடந்த ஒரு மாத காலமாக, தமிழக மக்களே இதை மவுன சாட்சியாக உலகிற்கு உரைத்துக்கொண்டிருக்கின்றனர்.

சூழ்ச்சிகளாலும் சூதுகளாலும் நம்மை வென்றுவிடலாம் என்று கனவு காணும் எதிரிகளும் இதை உணர்ந்தே உள்ளனர். கள நிலவரம் நம்மை ஊக்குவிப்பதாக இருக்கையில்தான், நமது அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும் அளந்தும் தீர்க்கமாகவும் நாம் எடுத்து வைக்க வேண்டும். இத்தகைய சூழலில், கழகத்தின் அடுத்த கட்டத் தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.