“அதிமுக உடன் கூட்டணி இல்லை” - நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி!! தகர்ந்ததா அதிமுக -வின் கூட்டணி கனவு!?

கடந்த சில நாட்களாக தமிழக வெற்றி கழகம் “Silent Mode” -ல் இருந்தது என்றே சொல்ல வேண்டும். மேலும் சம்பவம் நடந்து பல...
eps vs vijay
eps vs vijay
Published on
Updated on
2 min read

வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும்  மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர்.  இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இது சம்பந்தப்பட்ட வழக்குகள் சிபிஐ -க்கு மாற்றப்பட்டு, அவை உச்சநீதிமன்றத்தில் உள்ளன.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக வெற்றி கழகம்  “Silent Mode” -ல் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.  மேலும் சம்பவம் நடந்து பல நாட்களாகியும் விஜய் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறாதது, கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. 

இந்நிலையில்ம கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு அறிவித்து ஒவ்வொரு குடும்பத்தையும் கரூருக்கு நேரில் சென்று சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  ஆனால் பல்வேறு காரணங்களால் கரூருக்கு செல்லமுடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சென்னை வரவழைத்து சந்தித்து வருகிறார். இதற்கு நேற்று முன்தினம்  காலை முதலே தவெக தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்களை தங்களது சொந்த வாகனகளில் அழைத்து வந்து கரூர் வெண்ணைமலையில் உள்ள தனியார் அரங்கில் தங்க வைத்திருந்தனர். பின்னர் சொகுசு பேருந்துகள் மூலம் நேற்று இரவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மாமல்லபுரம் அழைத்துவரப்பட்டனர். அப்போது ஒவ்வொரு குடும்பங்களையும் தனிமையில் சந்தித்த விஜய் அவர்களின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. 

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு விஜய் மக்களை சந்தித்துள்ளார், மேலும் மாவட்ட அளவில் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.  ஓரளவிற்கு பட்ட அடியிலிருந்து மீண்டு தவெக இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது என சொல்லாம். 

தமிழக வெற்றி கழகத்தில் நிலவும் மற்றுமொரு பெரிய சிக்கல் அங்கே விஜய் தான் தலைவர் முகம். அவரோடு நெருக்கமாக இருக்கும் நபர்கள் இரண்டாம் கட்ட முன்றாம் கட்ட தலைவர்களாக அறியப்படுகின்றனர். அது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த குழப்பத்தினை  நீக்கத்தான் நேற்று புதிய நிர்வாகிகள் பெயர்  பட்டியலை வெளியிட்டிருந்தார். 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற்றது.  இந்த நிர்வாகக்குழு கூட்டம் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டம் முடிந்த உடன் செய்தியாளர்களை சந்தித்த சி.டி நிர்மல் குமார் “கட்சியின் வருங்கால முன்னெடுப்புகள், வருகிற சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகள் கோபத்தில் ஆலோசிக்கபட்டதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “விஜய், ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் மேற்கொள்வார் என்பது யூகத்தின் அடிப்படையில் வந்தது. எப்போதும் போலவே எங்கள் தலைவரின் மக்கள் சந்திப்பு இருக்கும். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு இன்னும் எங்களுக்கு அழைப்பு கொடுக்கவில்லை.

பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தது தனிப்பட்ட சந்திப்பு. எனவே அதனை நாங்கள் அரசியலாக்க விரும்பவில்லை. கட்டுப்பாடு அற்ற கூட்டம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது, காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாத கூட்டம் என ஒப்புக்கொள்கிறாரா? என கேள்வி எழுப்பினார். கரூரில் சம்பவத்தன்று 67 போலீசுக்கு மேல் இருந்திருப்பார்களா? என்றால் சந்தேகம்தான்.

விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தாமதம் ஏன் என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய இடத்திற்கு 7 மணி நேரம் பயணம் மேற்கொண்டோம். பொதுவெளியில் உரிய பாதுகாப்பு இருந்திருந்தால், காவல்துறை ஒத்துழைப்பு இருந்திருந்தால் எளிதாக நாங்கள் பரப்புரை இடத்திற்கு சென்றிருப்போம். மேலும் நீங்கள் திமுக -வினர் நடத்திய நாடகத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  நாங்கள் வெளியேயே தடுத்து நிறுத்தப்பட்டோம், அதற்குள் உடற்கூறாய்வு முடிந்துவிட்டது என கூறினர். அதனால்தான் இனி எங்களுக்கு நீதி கிடைக்காது என உயநீதிமன்றத்தை நாடினோம். எங்களின்  முதல் குற்றச்சாட்டு காவல்துறையினர் மீதுதான்.  தமிழக வெற்றி கழகத்தை முடக்கிப்பார்த்தனர் எவ்வளவோ நெருக்கடிகளை தந்தனர்” என பேசியிருந்தார்.

தொடர்ந்து அவரிடம், கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது, “ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டணி குறித்து என்ன நிலைப்பாட்டில் இருந்தோமோ, அதே மனநிலை தான் தற்போதும்  என பேசியுள்ளார். 

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி பொதுமேடையில், தமிழக வெற்றிக் கழக கொடியை காண்பித்து, “பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது. யாரும் எதிர்பாராத கூட்டணி அமையும்” என பேசி சலசப்பை ஏற்படுத்தியிருந்தார். அதிலிருந்து தமிழக வெற்றி கழகம் NDA கூட்டணியில் இணையப்போவதாக பல  கசிந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் சம்பவத்திற்கு பிறகு எங்கள் கூட்டணி குறிதான நிலைப்பாடு மாறவில்லை கூறியிருப்பது அதிமுக ஆசையை நீர்த்துபோகச்செய்யும் என ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com