சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு பல்வேறு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இப்பேருந்து நிலையத்தில் தினம் தோறும் இரவு 8.20 மணிக்கு திருப்பத்தூரில் இருந்து மானாமதுரைக்கு பேருந்து இயக்கப்படுகிறது. இது போல் நேற்று மானாமதுரைக்கு செல்ல தயாராக இருந்த பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்துள்ளனர்.
நடத்துனர் பயணச்சீட்டுகளை கொடுத்த நிலையில் ஓட்டுநர் மனோகரன் என்பவர் பேருந்தை இயக்க தொடங்கியுள்ளார். மானாமதுரைக்கு இயக்க வேண்டிய பேருந்தை ஸ்டார்ட் செய்து பேருந்து நிலையத்தை ஒரு ரவுண்ட் அடித்து எடுத்து வந்து மீண்டும் பேருந்தை தொடங்கிய இடத்திலேயே நிறுத்தியுள்ளார். இதில் பேருந்தில் இருந்த பயணிகள் சற்று பதட்டமடைந்து கீழே இறங்கியுள்ளார்.
இதை பற்றி பேருந்து நிலையத்தில் இருந்த நேர காப்பாளரிடம். பயணிகள் ஓட்டுநர் மது போதையில் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனாலும் ஓட்டுநர் பேருந்தை விட்டு இறங்காமல் பேருந்தை மீண்டும் இயக்கி மானாமதுரை செல்லும் சாலையில் நிறுத்தியுள்ளார். இதனால் பேருந்தை விட்டு இறங்காமல் இருந்த பயணிகள் உயிர் பயத்துடன் பயணித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் போலீசார் ஓட்டுனரிடம் பேசி அவரை கீழே இறங்க சொல்லியுள்ளனர். இருப்பினும் ஓட்டுநர் “நான் தான் பேருந்தை இயக்குவேன் என அடம்பிடித்துள்ளார்” பின்னர் வெகு நேரம் போராட்டத்திற்கு பின் ஓட்டுனரை பேருந்தை விட்டு இறக்கிய காவலர்கள் அவரை பரிசோதத்தில் ஓட்டுநர் மனோகரன் அளவுக்கு மிஞ்சிய மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த பேருந்தே திருப்பத்தூரில் இருந்து மானாமதுரைக்கு இயக்கப்படும் கடைசி பேருந்து என்பதால் பயணிகள் சுமார் ஒன்றரை மணி நேரம் பேருந்து நிலையத்தில் தவித்துள்ளனர். பின்னர் வேறு ஒரு ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு பேருந்து பாதுகாப்பாக இயக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.