தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக இன்று புதுச்சேரியில் சற்று நேரத்தில் ஆலோசனை கூட்டம் தொடங்க உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பொதுக்குழு கூட்டத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ள நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து வருபவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்களுக்கு கழகத்தின் சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலையில் இருந்தே மைதானத்தில் தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது மைதானத்திற்கு 100 மீட்டர் தொலைவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கூட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க தொண்டர்கள் முழுவதுமாக பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுப்பப்பட்டு வருகின்றனர். இதற்கு தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு அழிப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில் தமிழக வெற்றி கழக கட்சியின் நிர்வாகி மருத்துவர் பிரபு என்பவரின் தனி பாதுகாவலர் டேவிட் என்பவர் அனுமதியின்றி கைதுப்பாக்கியை கூட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயன்ற போது மெட்டல் டிடெக்டர் மூலம் கண்டறியப்பட்டது பரபரப்பு ஏற்பட்டது. அந்த துப்பாக்கி முறையாக உரிமம் பெற்ற துப்பாக்கி என டேவிட் கூறியபோதும் இது போன்ற நிகழ்வுகளுக்கு அவற்றை கொண்டு வரக்கூடாது என போலீசார் தெரிவித்தனர். மேலும் நிர்வாகி பிரபு போலீசாருக்கு விளக்கமளித்த நிலையிலும் அதை ஏற்காத போலீசார் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஜய் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்ட நிலையில் பொதுகுழுக் கூட்டத்திற்குள் ஒருவர் தூப்பாக்கியுடன் நுழைய பார்த்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மேலும் பாதுகாப்பு மற்றும் பரிசோதனை நிகழ்வுகளை போலீசார் அதிகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.