vijay
vijay

உறுதியாகிறதா தவெக - காங்கிரஸ் கூட்டணி!? எஸ்.ஏ.சி -திருச்சி வேலுச்சாமி சந்திப்பின் பின்னணி என்ன!?

பீகார் தேர்தலுக்கு பிறகு திமுக அதிகளவு சீட்டும் கொடுக்காது, ஆட்சியில் பங்கும் கொடுக்காது என்ற பயத்தில்தான் ...
Published on

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் வரவிருக்கிறது. 2026 தேர்தல் தமிழகத்தின் மிக முக்கியமான இதுவரை பார்க்காத ஒன்று என்பதில் சிறு சந்தேகமும் இல்லை. ஆனால் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தான் மக்களை பெரிதும் அலைக்கழிக்கின்றன.. ஆளுங்கட்சியான திமுக ஆட்சிக் கட்டிலிருந்து இறங்கத் தயாராக இல்லை. ஆனால் வலிமையான கூட்டணியை திமுக-விற்கு எதிராக அதிமுக எழுப்பும் என்று நினைத்த சூழலில் மாற்றாக தமிழக வெற்றி கழகம் திமுக -விற்கு எதிரான கூட்டணியை கட்டி எழுப்பி வருகிறது.

சின்ன ரீவைண்ட்..!

விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்குபோல  காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.

அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்திதான் அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர்க வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர்.  இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும்,  இந்த துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தலைதூக்குவது கடினம் இது விஜய்க்கு நிச்சயம் பின்னடைவு என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் கரூர் சம்பவம் ஆளுங்கட்சியான திமுக -வுக்குத்தான் பின்னடைவை ஏற்படுத்தியது ஒழிய பாதிக்கப்பட்டவர்கள்  உட்பட யாரும் விஜய் மீது கோவத்தை வெளிப்படுத்தவில்லை. 

இந்த சூழலில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விஜய் பெரிதளவில் வெளியே வராமலே இருந்தார். சமீபத்தில் நிர்வாகிகளுடன் சிறப்பு பொதுக் குழுவையும் கூட்டியிருந்தார்.

புதுப்பொலிவுடன் தமிழக வெற்றி கழகம் 

இதற்கிடையில் அதிமுக -விலிருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன், விஜய் கட்சியில் இணைந்தது தமிழக வெற்றி கழகத்திற்கு ஏறுமுகமாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் திராவிட சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் நேற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துவிட்டார். ஓரளவுக்கு தங்களின் பிரச்சனைகளில் இருந்து தவெக மீண்டுவிட்டது எனவே சொல்ல வேண்டும்.  மேலும், மேலும் திராவிட சிந்தனையாளர் நாஞ்சில் சம்பத் கூட தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டார்.  இந்நிலையில் நாளை விஜய் புதுச்சேரியில் மக்களை சந்திக்க உள்ளார்.  

தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கிறதா காங்கிரஸ்!?

50 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட கட்சியான காங்கிரஸ் பீகார் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாதவகையில் காங்கிரஸ் அம்மாநிலத்தில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. வெறும் 5 இடங்களை மட்டுமே காங்கிரஸ் தனது கையில் வைத்திருக்கிறது. இது கட்சி ரீதியாகவே மிகப்பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. மேலும் இது தமிழகத்திலும் எதிரொலித்தால் காங்கிரசிற்கு மிகப்பெரும் பின்னடைவாக அமையும் எனக்கூறப்பட்டது .

பீகார் தேர்தலில் காங்கிரசின் தோல்வி நிச்சயம் திமுக கூட்டணியில் எதிரொலிக்கும் என உறுதியாக சில விமர்சகர்கள் கூறியிருந்தனர். இன்னும் சொல்லப்போனால் பீகாரில் அவர்கள் அடைந்த தோல்விக்காக தமிழகத்தில் மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். அதுவும் அதிமுக -வினரால் அல்ல திமுகவினரால் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் திமுக -வில் கரைந்துவிட்டது என்பதுதான் உண்மை. ஆனால் காங்கிரசின் இளம் எம்.பி -கள் இந்த போக்கை விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.. மேலும் காங்கிரசும் எம்.பி ஜோதி மணி ஒரு அடி அதிகம் போய்.. “விஜய் ஒன்றும் எங்கள் கட்சிக்கு புதியவர் அல்ல என காங்கிரஸ்” என பேசியிருந்தது, அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜயை ராகுலை காந்தி தொடர்புகொண்டு பேசினார். அதன் பிறகு ராகுல் காந்தியின் நெருக்கமான நிர்வாகியான பிரவீன் சக்கரவர்த்தி அடிக்கடி விஜயை சந்தித்தாகக் கூறப்பட்டது. ஆனாலும்,  இருதரப்பும் அமைதிகாத்து வந்த நிலையில், தற்போது விஜயை பிரவீன் சக்கரவர்த்தியை சந்தித்து பேசியது உறுதியாகியுள்ளது. மேலும் “விஜயை சந்தித்தது உண்மைதான் எனவும், என்ன பேசினோம் என்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது” எனவும்  சில தினங்களுக்கு முன்னர் பேசியிருந்தார்.

ஆனால் இதுகுறித்து தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் கேள்வி எழுப்பியபோது, “இதுகுறித்து தனக்கு தெரியாது” என பேசியிருந்தார். இந்த இந்த சூழலில்தான், தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருவள்ளூரில் பரப்புரை மேற்கொண்ட போது, “தமிழகத்தில் திமுக கூட்டணி வலிமையாக இல்லை, காங்கிரஸ் மற்றும் விசிகவினர் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை நடத்துகிறது"  என பேசியுள்ளார்.

இவரின் கூற்றை உறுதிப்படுத்தும்விதமாக மற்றுமொரு சம்பவம் நடந்துள்ளது. தமிழக காங்கிரசின் செய்தித்தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமியும் விஜய் -ன் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரும் சந்தித்து பேசியுள்ளனர். தமிழக காங்கிரஸ் பிரமுகர் வீட்டு நிச்சயதார்த்த விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான திருச்சி வேலுசாமி, பொன் கிருஷ்ணமூர்த்தி, தவெக தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது சந்திரசேகருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சு நடத்தினர். முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற காரில் திருச்சி வேலுச் சாமியும் சென்றாராம். அப்போது இருவரும் காங்கிரஸ் - தவெக கூட்டணி குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது.  திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற காரில் திருச்சி வேலுசாமியும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இருவரும் காங்கிரஸ்- தவெக கூட்டணி குறித்து பேசியிருக்கலாம் என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பீகார் தேர்தலுக்கு பிறகு திமுக அதிகளவு சீட்டும் கொடுக்காது, ஆட்சியில் பங்கும் கொடுக்காது என்ற பயத்தில்தான் தமிழக வெற்றிக்கழகத்துடன் இனியவுள்ளதாகவும் பேச்சுக்கள் எழுகின்றன. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com