தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அணைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் இயங்கிவருகின்றன. அமைச்சர்களின் ஊழல், வழக்கு, சட்ட ஒழுங்கு பிரச்சனை, அண்ணா பல்கலை மாணவி விவகாரம், டாஸ்மாக் ஊழல் விவகாரம் என திமுக திண்டாடி வருகிறது. இந்நிலையில் முதலைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறை கடந்த 2023 ஜூன் மாதம் கைது செய்தது..நீண்ட சிறைவாசத்திற்கு பிறகு 2024 செப்டம்பர் உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட மனுவின் விசாரணையின்போது “ஜாமீன் வேண்டுமா? அமைச்சர் பதவி வேண்டுமா? என்பதை வருகிற 28 ஆம் தேதிக்குள் செந்தில் பாலாஜி முடிவு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.இதனால் அவர் அமைச்சராக நீடிப்பதில் சிக்கல் எழுந்தது.
தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் மசோதா கடந்த சனி அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இந்த மசோதாவை செந்தில் பாலாஜியே அறிமுகம் செய்வார் என்கூறப்பட்டிருந்த நிலையில் அவருக்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இந்த மசோதாவை தாக்கல் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது..
இவர் கதை இப்படியிருக்க வனத்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை “பெண்கள் ஓசியில் பயணிக்கிறார்கள்” என்று கூறி மாட்டியிருந்தார்.. அதனை தொடர்ந்து தற்போது “பெண்கள் குறித்தும் மதம் குறித்தும் இழிவான கருத்தை” கூறியதாக அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் கட்சி பதவி பறிக்கப்பட்டது இருப்பினும் அவர் அமைச்சராக பதவியில் நீடித்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றங்கள் நிகழும் என தகவல் வெளியான நிலையில் செந்தில் பாலாஜியும், பொன்முடியும் தங்கள் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அமைச்சர் பொன்முடி கவனித்து வந்த வனத்துறை, பால்வளத்துறை ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது. செந்திலை பாலாஜி வகித்து வந்த மின்சார துறை சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. முறையே மதுவிலக்கு ஆயத்தீர்வை முத்துசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ மனோ தங்கராஜ் மீண்டும் சட்டப்பேரவையில் இடப்பெற்றுள்ளார். தேர்தல் மற்றும் மாவட்டத்திற்கான அமைச்சர் எனும் அடிப்படையில் மீண்டும் அவர் இணைக்கப்பட்டிருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்