
இரண்டாம் நாளாக, இன்று நடந்த பூத் கமிட்டி குழுவில்பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், மக்களுக்கு நல்லது நடக்க, எந்த எல்லைக்கும் செல்ல தவெக தயாராக இருக்கிறோம், நம்முடைய ஆட்சியில் எந்த ஊழலும் இருக்காது. எனவே தேர்தல் முகவர் மக்களிடம் தைரியமாக சென்று ஓட்டு கேளுங்கள்.
ஓட்டு போட வரும் மக்களை, தேர்தல் முகவர்கள் தான் பாதுகாக்க வேண்டும். குடும்பமாக நமக்கு ஓட்டு போடா வரும் மக்களின் பாதுகாப்பை நாம்தான் உறுதி செய்ய வேண்டும்.அண்ணா சொன்னது போல “மக்களிடம் செல் மக்களிடமிருந்து கற்றுக்கொள், மக்களுடன் வாழ்” என நாம் செயல்பட வேண்டும்.
இவ்வாறாக நாம் செயல்பட்டால், உங்கள் ஊர் சிறுவாணி ஆற்று தண்ணீர் போல நம்முடைய ஆட்சியும் தூய்மையாக அமையும்.ஒரு வெளிப்படையான ஆட்சியாக தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி அமையும் என்பதை எங்களால் உறுதியாக தெரிவிக்க முடியும் என கூறி இருக்கிறார் விஜய்.
விஜய் பேசுவதற்கு முன்னதாக பேசிய ஆதவ் அர்ஜுனா, 1977- ல் எப்படி எம்ஜிஆர் என்ற புரட்சி தொடங்கப்பட்டதோ, அதே போல் இப்போது 2025 - ல் விஜய் என்ற புரட்சி மக்களால் தொடங்கப்பட்டுள்ளது.ஊழல் ஆட்சியையும், அடிமை ஆட்சியையும், எதிர்பதற்கே தமிழக வெற்றி கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.
திமுக அதிமுக என்ற பழைய காட்சிகளையே பார்த்த பத்திரிகையாளர்களுக்கு எங்கள் கட்சி கொஞ்சம் புதிதாக தான் இருக்கும்.வக்பு சட்டத்தை எதிர்த்து முதல் முதலில் போராடியது நாங்கள், உண்மையாகவே எதிர்க்கட்சி தலைவர் எங்கள் அண்ணன் தான். வக்பு சட்ட எதிர்ப்புக்கு ஏன் ஆளும் கட்சி எங்களுடன் கைகோர்க்க வில்லை, இதற்கான பதிலை சொல்ல அவர்கள் தயாரா என கேள்வி எழுப்புகிறார் ஆதவ் அர்ஜுனா.
வாக்குச்சாவடி முகவர்கள், முதலில் உங்கள் பலத்தை நீங்கள் அறிய வேண்டும். வந்தவுடன் நான் கவனித்தேன் அனைவரும் உங்கள் கையில் நோட் பேட் வைத்து கொண்டு குறித்து கொண்டிருந்தீர்கள். மேலும் சில ஹாஸ்டகுகளை உருவாக்கினார்கள். “பாய் பாய் திமுக” என யாரோ போட்டிருந்தார்கள், இது தான் அரசியல் இது போதும் நமக்கு, திமுகவினருக்கு எங்களை எதிர்கட்சிகளாக ஏற்றுக்கொள்வதற்கு பயம்.
தேர்தலில் வெற்றி பெற பணம் தேவையில்லை, மக்களுக்காக ஒரு உண்மையான தலைவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையும், பிரசாரங்கள் செய்வதும்,மக்களை சந்திப்பதுமே போதுமானது ஆகவே, இதை எல்லாம் செய்து கொண்டிருக்கும் நமது கட்சி நிச்சயம் வெற்றி பெரும் என கூறி தனது உரையை முடிவு செய்தார் ஆதவ் அர்ஜுனா.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்