tamilnadu politician  
தமிழ்நாடு

திமுக-விற்கு சாதகமாக வந்த கருத்துக்கணிப்பு..! “தம்பி விஜய் வரவேண்டும்” - பயத்தை வெளிக்காட்டிய அதிமுக! வலுக்கும் போட்டி!

இந்த போக்கு உண்மையிலே அதிமுக -வின் பலவீனத்தை வெளியில் காட்டுவதாகவே உள்ளது. அது உண்மையாகவே இருந்தாலும் ...

Saleth stephi graph

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நெருங்க நெருங்க இங்கு அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சொல்லப்போனால் தற்போது வரை மும்முனை போட்டிதான் நிலவுகிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி  அதிமுக மாற்றம் அதன் கூட்டணி மற்றும் தவெக. ஆனால் இத்துணை போட்டிகள் இருந்தாலும் அரசியல் களம் திமுக -விற்கு சாதகமாக இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

“டைம்ஸ் நவ்” பகிர்ந்த கருத்துக்கணிப்பில் திமுக -விற்கு சாதகமான சூழல் நிலவுவதாக சொல்லப்பட்டிருக்கிறது

அதிலும் குறிப்பாக மாநிலங்களவை எம்.பி களுக்கான அறிவிப்பை திமுக வெளியிட்டிருக்கிறது. அதில் மக்கள் நீதி மையம் சார்பில் கமல் ஹாசன் எம்.பி ஆகிறார். வழக்கறிஞர் பி.வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோருக்கு ராஜ்ய சபா எம்.பி சீட் வழங்கப்பட்டிருக்கிறது, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த கவிஞர் சல்மாவை நியமித்திருப்பதற்கு பலரும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர்.

குழப்பத்தில் அதிமுக 

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வின் தேர்தல் கூட்டணி தேமுதிக மட்டும்தான். கூட்டணியின்போதே தேமுதிக -விற்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக எடப்பாடி உறுதி அளித்திருந்தார். ஆனால் தற்போது எடப்பாடி “தேமுதிக -விற்கு மாநிலங்களவை எம்.பி சீட்டை வாழங்க முடியாது!” திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதனால் பிரேமலதா செம கடுப்பில் இருப்பதாக தெரிகிறது. எனவே அதிமுக கட்சிக்காரர்களுக்கே எம்.பி வாய்ப்பு அதிகம் இருக்கிறது. 

அதிமுக- பாஜக கூட்டணிக்கு பிறகு  பாமக -வை NDA கூட்டணியில் இணைக்கு பாஜக பெரும் விருப்பம் தெரிவித்து வருகிறது. எனவே மீண்டும் ஒரு எம்.பி சீட்டை அன்புமணிக்கு வழங்க வேண்டும் என பாமக -கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. ஆனால் எடப்பாடி என்ன யோசிக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விஜய்யை அழைக்கும் அதிமுகவினர்..!

உண்மையில் அதிமுகவும் எடப்பிடியும் விரும்பிய கூட்டணி விஜையோடுதான்.  வேறு வழியிந்திரியே பாஜக -உடன் அதிமுக இணைந்துள்ளது.

ஆனால்  கள நிலவரமும் அதையேதான் சொல்கிறது, என்பதுதான் ஆச்சர்யமே. பல அதிமுக தொண்டர்கள் பாஜக-வுடன் இணைந்து வேலை பார்க்க மறுப்பதாக பல தகவல்கள் வெளியாகின்றன. 

இந்த சூழலில் தான், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு “திமுக -பாஜக கூட்டணிக்குள் தவெக இணைய வேண்டும், அன்பு தம்பி விஜய் எங்களோடு இனிதாய் வேண்டும்” எனக்கூறியுள்ளார். இந்த போக்கு உண்மையிலே அதிமுக -வின் பலவீனத்தை வெளியில் காட்டுவதாகவே உள்ளது. அது உண்மையாகவே இருந்தாலும்  அதை அதிமுக வெளிப்படுத்தக்கூடாது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஒருவேளை விஜய் அதிமுக பாஜக கூட்டணையில் இணைந்தால் அது திமுக -விற்கு நிச்சயம் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்