Northeast Monsoon Weather Update 
தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை - இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு!

அரியலூர் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்...

மாலை முரசு செய்தி குழு

குமரிக்கடல் பகுதியில் இருந்து உள் தமிழகத்தின் வழியாக ராயலசீமா வரை காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. மேலும், தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சியும் காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இன்று (புதன்கிழமை) தமிழகத்தின் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை (வியாழக்கிழமை) திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்