தமிழ்நாடு

"ரோசி" டீக்கடை to முதலமைச்சர்... தாய்வீடு திரும்பிய ஓ.பி.எஸ்!

அதிமுகவிற்கு எதிர்காலமே இல்லை எனவும் எடப்பாடி ஒரு சர்வாதிகாரி...

மாலை முரசு செய்தி குழு

தேனி பெரியகுளதில் 1951 ஆம் ஆண்டு பிறந்தவர் பன்னீர்செல்வம். பி.ஏ படித்திருந்த இவர் ஆரம்பத்தில் தந்தையுடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டார். பின்னர், சொந்தமாக பால் பண்ணை மற்றும் தனது நண்பர்களுடன் சேர்ந்து பெரியகுளத்தில் டீக்கடை ஒன்றையும் நடத்தி வந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் 1972-ல் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திமுக-வில் இருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார். MGR-ன் தீவிர ரசிகனாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவர் கட்சி ஆரம்பித்த பிறகு அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1982 ஆம் ஆண்டு கட்சியில் இவருக்கு பெரியகுளம் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணித் துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின், அ.தி.மு.க ஜெயலலிதா, ஜானகி என இரு அணியாகப் பிளவு ஏற்பட்டது. பன்னீர்செல்வம் ஜானகி அணி ஆதரவாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 1991 ஆம் ஆண்டு அதிமுகவின் இரண்டு அணிகளும் ஒன்றிணைந்து, ஜெயலலிதா தலைமைக்கு வந்தது. அதைத் தொடந்து, 1993 ஆம் பெரியகுளம் நகர் கழகச் செயலாளராகவும், 1996 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரியகுளம் நகராட்சித் தலைவராகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

மேலும் 2000-ல் தேனி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிளும் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார் ஓ.பன்னீர்செல்வம். முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனபோதே அவருக்கு வருவாய்த்துறை, பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது. 2001-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா டான்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

அப்போது, ஓ.பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவியில் அமர வாய்ப்பளித்தார் ஜெயலலிதா அதனை தொடர்ந்து 2001,செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை தமிழக முதல்வராகப் பணியாற்றினார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓபிஎஸ், அந்தத் தேர்தலில் அதிமுக தோல்வியடைய, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட OPS-க்கு நிதி அமைச்சர் பதவியும் அவை முன்னவர் பொறுப்பும் கொடுக்கப்பட்டது.

மீண்டும் 2014 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தால் 4 ஆண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு முதல்வர் பதவியை இழந்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக முதல்வரானார் ஓபிஎஸ். 2014 செப்டம்பர் முதல் 2015 மே வரை முதல்வராகப் பணியாற்றினார். 2016-ம் ஆண்டு, டிசம்பர் 5-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்த போது, 2016, டிசம்பர் 6-ம் தேதி மீண்டும் மூன்றாவது முறையாக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அவசரப்பொறுப்பேற்றர். 2017 பிப்.15-ம் தேதி வரை அந்தப் பதவியில் இருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவையொட்டி தமிழக அரசியலிலும், அதிமுக-விலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. அதிமுகவில் அதிகார மையங்களாக இருந்த சசிகலா-ஓ. பன்னீர்செல்வம் தரப்பு என அதிமுக இரண்டு அணிகளாகப் பிளவுபட்டது. இதனால், அதிமுகவில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஓபிஎஸ்ஸின் தர்மயுத்தம் தமிழக அரசியலில் பரப்பாக பேசப்பட்டது. இதற்கிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா மீண்டும் சிறைக்குச் செல்ல, எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். பின்னர் பல்வேறு அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு பின் 2017, ஆகஸ்ட் ஓபிஎஸ் அணி மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி ஒன்றிணைந்தன. அதன் விளைவாக ஓ.பி.எஸ்-க்கு அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளர் பதவியும், தமிழக துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ், கட்சியில் இருந்து நீக்கப்பட்த நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றங்களில் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். இருப்பினும் ஓபிஎஸ்-க்கு சாதகமான சூழல் கனியவில்லை. தேர்தல் ஆணையம், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது. அதனையடுத்து 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து சுயேட்சை வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, பாஜக- அதிமுக கூட்டணி அமைத்த நிலையில், ஓபிஎஸ் தனித்து விடப்பட்டார்.

இந்த சூழலில் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தனர். மேலும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் தவெகவிலும், அதிமுக-விலும் சேர்ந்தனர். இந்நிலையில், திமுகவில் இணைந்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் முக்கிய தலைவராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்த ஓ.பன்னீர்செல்வம், 3 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் மீண்டும் தாய் கழகமான திமுக -வில் இணைந்தார்.

அவரது மகன் முன்னாள் எம்.பி ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ அய்யப்பன் உள்ளிட்ட ஆதரவாளர்களும் திமுகவில் இணைந்துள்ளனர். இதனையடுத்து திமுகவில் இணைந்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்" என ஓ பன்னீர்செல்வம் பேட்டி அளித்துள்ளார். "தமிழ்நாட்டில் 5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை நடத்தியுள்ளார் மு.க.ஸ்டாலின். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மீண்டும் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்" எனவும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மேலும் "அதிமுகவிற்கு எதிர்காலமே இல்லை" எனவும் "எடப்பாடி ஒரு சர்வாதிகாரி" எனவும் சாடியுள்ளார். டீக்கடை நடத்திய ஓபிஎஸ்ஸை, முதலமைச்சர் பதவியில் அமர்த்தினார் ஜெயலலிதா.

ஆனால் தற்போது திமுக-வில் இணைந்ததையடுத்து அதிமுகவினர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விமசானமாகி உள்ளது.இதனையடுத்து தமிழக மூத்தவள் ஸ்டாலின் "ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன்" எனவும் திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்" எனவும் வரவேற்று பதிவிட்டுள்ளர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.