தமிழக வெற்றி கழக சார்பில் இன்று (செப் 28) 'தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை' திறந்து வைக்க முதல்வர் விஜய் மதுரைக்கு தனி விமானத்தில் வந்தடைந்தார். மேலும், தமிழக முதல்வரை மதுரை மக்கள் ஆரவாரத்துடன் வழிநெடுக வரவேற்பளித்தனர்.
'தமிழ்நாடு அரசு மருத்துவமனை'களில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 'ஒரு கிராம் தங்க மோதிரம்' வழங்கப்படும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று முதல்வர் சி. ஜோசப் விஜய் 'மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்' தாய் மாமன் தங்க மோதிரத் திட்டத்தை' தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த தொடக்க விழாவில், சுமார் 25 பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம் வழக்கங்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திட்டமானது, 2026 ஜூன் 22 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை உள்ளடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 10.25 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட காந்தி நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்க உள்ளார். மேலும், அவர் மாலை 4.30 மணியளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் செல்வதற்கு முன்பு, அரசு விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுப்பார் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.
இந்நிலையில், மதுரையில் 'திரிஷா நற்பணி' மன்றத்தினர் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் இல்லை என்று வருத்தப்படும் தாய்மார்களுக்கு தன்னையே தாய்மாமன் என்று கூறி மகிழ்ச்சி அடைய செய்த மாண்புமிகு. தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றி.
மதுரை மாவட்ட திரிஷா நற்பணி மன்றம் என்று குறிப்பிடப்பட்ட போஸ்டர் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், அதில் நடிகை திரிஷாவும், கையில் குழந்தையுடன் தமிழக முதல்வர் விஜய்-யும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த போஸ்டர் மதுரையில் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தாலும், இதில் வாக்கியம் அமைப்பதில் பிழை, வார்த்தை பிழை என்று பிழைகள் பல அந்த போஸ்டரில் காணப்பட்டுள்ளது. குறிப்பாக, மாண்புமிகு. "தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு" என்பதற்கு பதிலாக "மாண்புமிகு. தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்" என இடம்பெற்றுள்ளது.
மேலும், "மனமார்ந்த நன்றி' என்பதற்கு பதிலாக 'மணமார்ந்தி நன்றி' என குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த மதுரையில் எழுத்து பிழைகளோடு மதுரை முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்