தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இருவரும் சில நாட்களுக்கு முன் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டு திருமண நிகழ்வில் ஜோடியாக கலந்து கொண்டதை பலரும் விமரிசித்தும் கேள்வியும் எழுப்பி வருகின்றனர். அதையடுத்து ஒரே நிற உடையில் ஒரே காரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் விமர்சித்துள்ளார்.
திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பார்த்திபனிடம், திரிஷாவின் போட்டோவை காட்டி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு வழக்கம் போல் தனது நகைச்சுவையான பேச்சில், ‘குந்தவையை வீட்டிலேயே கொஞ்ச நாள் குந்தவையுங்க’ என சொல்லி இருந்தார். மேலும் "அதுதான் நல்லது" என்றும் பேசி இருந்தார்.
இதற்கு த்ரிஷா கடும் கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் தனது சமூக வலைதள பதிவில், "ஒருவரின் கையில் மைக் இருக்கிறது என்பதற்காக அவர் பேசுவது நகைச்சுவையோ அறிவார்ந்த பேச்சோ ஆகிவிடாது. சிலர் பேசும் வார்த்தைகள் அவர்களுடைய குணத்தையே வெளிப்படுத்தும்" என பார்த்திபனுக்கு பதிலளிக்கும் விதத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக பார்த்திபன் "தான் எந்த நோக்கத்திலும் அப்படி சொல்லவில்லை என்றும் வார்த்தை ஜாலமாக மட்டுமே குந்தவை வீட்டிலே குந்த வைக்கவும்.. என பேசி இருந்தேன் என்று விளக்கி இருந்தார்.
தற்போது அது மேலும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது, பார்த்திபன் " நான் மகளிர் தின விழாவில் வேலுநாச்சியார் பற்றியோ, டயானா சால்ஸ் பற்றியோ அல்லது எப்போதும் பேசும் அன்னை தெரேசா பற்றியோ பேசவே தான் ஆசைப்படலாமே தவிர இப்படி நான் ஆசைப்பட்டேன்னு சொல்வது சரியில்ல" எனவும் பதிவிட்டுள்ளார். "நான் சொன்னது எனக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்மணியைப் பத்தி.. ஒரு மூணாவது மனுஷியைப் பத்தி.. எனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு மூணாவது மனுஷியைப் பத்தி. இந்தப் பிரச்சனையில மொத்தம் மூணு பேருன்னு எடுத்துக்கிட்டா முதலில் என்னுடைய அன்பு நண்பர் விஜய், ரெண்டாவது இடத்துல அவருடைய மனைவி இருப்பாங்க.. கோர்ட் தீர்மானிக்காத வரைக்கும், இப்ப வரைக்கும் அவங்க மனைவி தானே" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
"இந்த மூணாவது மனுஷியைப் பத்தி நான் பேச வேண்டிய அவசியமில்லை. நான் சொன்னது மூணாவது மனுஷியைப் பத்தி. அவங்களை வீட்ல இருந்திருக்கலாம்னு அதனால் இந்த சர்ச்சை தவிர்க்க பட்டு இருக்கும் என்று ஆனா இது எல்லாமே பெண்களுக்கு எதிரான ஒரு விஷயமா சித்தரிக்கபடுது, பெண்கள் எல்லாமே வீட்டுக்குள்ளேயே இருங்க அப்படின்னு சொன்ன மாதிரி ஒரு கருத்தை நிறைய பேர் அதைப் பதிவு செஞ்சதுக்கப்புறம் எனக்கு ஒரு கஷ்டம் வந்துருச்சு'' எனவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் "நான் வருத்தம் தெரிவித்து பதிவிட்டிருக்க வேண்டாமென்றும் சிலர் என்னிடம் கேட்டுக்கொண்டார்". மேலும் தொடர்ந்து த்ரிஷாவை பற்றி பொது வெளியில் கருத்துக்களும் சிலர் கொச்சையாகவும் பேசி இருக்கிறார்கள். எதற்கும் பதிலளிக்காத திரிஷா எனது பேச்சுக்கு மட்டும் பதிலளிப்பது ஏன் என்றும் கேட்டுள்ளார். மேலும் நான் எந்த கட்சியிடமும் காசு வாங்கி கொண்டு பேசவில்லை, என் வாழ்நாளில் அப்படி பேசவும் மாட்டேன் எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த இருவரின் கருதுத்து வேறுபடுக்களுக்கு சமூக வலைதளத்தில் பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் இதற்கும் வாய் திரைக்கதை தவெக தலைவர் விஜய் குறித்தும் விமர்சித்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.