DMK IT Wing criticises 
தமிழ்நாடு

"வழக்கம் போல ஓடிவிடுங்கள்.. தமிழ்நாடாவது தப்பிக்கும்" - பெண் குழந்தைகள் கடத்தல் சம்பவத்தில்.. தவெக-வை விளாசிய திமுக IT Wing!

இந்த டம்மி விஜய் ஆட்சியில் பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தால் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

Vinvizhi Leninton

தூத்துக்குடி, முதலூர் பகுதியில் பெற்றோரை தாக்கி அவர்களது இரண்டு பெண் குழந்தைகளையும் கடத்தி சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசை விமர்சித்து திமுக IT Wing தனது சமூகவலைதளப்பக்கத்தில் காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளது.

தூத்துக்குடி, சாத்தான்குளம் அருகே உள்ள முதலூர் பகுதியில், முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மேரி விஜிலாவை அரிவாளால் தாக்கிவிட்டு அவரது இரண்டு பெண் குழந்தைகளை கடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். முத்துகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் படுகாயத்துடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். மேலும், இது காதல் விவகாரம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவத்தினை குறிப்பிட்டு திமுக IT Wing காட்டமாக பதிவிட்டுள்ளது. அதில், "இந்த டம்மி விஜய் ஆட்சியில் பெண் குழந்தைகள் வீட்டில் இருந்தால் கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது.

நாட்டில் இப்படிப்பட்ட கொடூரங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல், ஜோதிடரின் பேச்சை கேட்டு தினம் ஒரு கலர் ட்ரெஸ் என்றும் ஜோதிடர் சொல்லும் இடங்களுக்குச் சென்றுகொண்டும் இருக்கிறார் டம்மி மூர்த்தி மேடையில் ஏறி "உங்க விஜய் மாமா இருக்கிறேன்" என்று சூடு சொரணை இல்லாமல் பேசி ரீல்ஸ் எடுத்தால் மட்டும் பத்தாது; பாதுகாப்பு கொடுக்க வேண்டும். பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு கொடுக்கத் துப்பு இல்லை என்றால், வழக்கம் போல ஓடிவிடுங்கள்; தமிழ்நாடாவது தப்பிக்கும்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழகத்தில் பெண் குழந்தைகள் காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 10 நாட்களுக்கு மேலாகியும் கிடைக்காத செஞ்சி சிறுமியின் வழக்கு தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி ராணிப்பேட்டையில் 1 வயது சிறுமி காணாமல் போய் பலநாட்களாகியும் இன்றுவரை கிடைக்காத நிலையில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது. தற்போது வீடு புகுந்து பெற்றோரை தாக்கி, கொலை செய்துவிட்டு அவர்களது மகள்களை மிரட்டி கடத்தி சென்றிருப்பது என்பது மேலும் அச்சத்தை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.