தமிழ்நாடு

எங்கு சென்றாலும் வெளியேற்றப்படும் தவெக வேட்பாளர் சத்தியபாமா? சற்றும் எதிர்பார்க்காத விஜய் - ரிசல்ட் மாறுகிறதா?

“ரூ.50 கோடி பணம் வாங்குனீங்க. ஓட்டு போட்டவங்களுக்கு என்ன பதில்?” என்றும் பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்

Muthu Lakshmi

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுகிறார் சத்தியபாமா. இவர் அதே தொகுதியில் அதிமுக வேட்பாளராக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் சில நாட்களிலையே தனது MLA பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு எந்த சரியான காரணமும் இல்லை என்பதால் தொகுதி மக்களிடம் மட்டுமின்றி அரசியலிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராஜினாமா செய்த வேட்பாளர்களே தற்போது தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.   

அக்டோபர் 6 தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தீவிர பிரச்சாரத்தை தொடக்கியுள்ளது அரசியல் கட்சிகள். அந்த வகையில் தவெக சத்தியபாமாஇன்று குண்டடம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகுமாரபாளையம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவரை சந்தித்த அப்பகுதி பொதுமக்களில் சிலர் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் சத்தியபாமாவின் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் திரண்டனர். மேலும் “ரூ.50 கோடி பணம் வாங்குனீங்க. ஓட்டு போட்டவங்களுக்கு என்ன பதில்?” என்றும் பொதுமக்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து சத்தியபாமா தனது வாக்கு சேகரிப்பை தொடர்ந்து நடத்தாமல், பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறினார். 

இதேபோல், குண்டடம் சுற்றுவட்டாரத்தில் கடந்த சில நாட்களாக சத்தியபாமாவின் பிரசாரத்தின்போது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக உப்பாறு அணைக்கு பிஏபி திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்குவது, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பெரிய குமாரபாளையம் ஊராட்சியிலும் பிரசாரத்துக்கு எதிர்ப்பு ஏற்பட்டது தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்தி வெளியேறினார் சத்தியபாமா. 

நேற்று இதே போல் மதுராந்தகத்தில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதத்திடமும் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “பணத்திற்காக கட்சி மாறி சென்றுவிட்டு மீண்டும் வாக்கு கேட்க வருவது எந்த விதத்தில் நியாயம்” என்றும் “எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறு துரோகி துரோகி’’ என கோஷங்கள் எழுப்பினர். மேலும் கருப்புக் கொடி ஏந்தி பிரச்சாரத்தை நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தொடர்ந்து மக்களின் அதிருப்தியை பெற்று வரும் இரு வேட்பாளரர்களும் வெற்றி பெறுவார்களா? என்ற கேள்வி கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலமுனை போட்டியாக மாறியுள்ள இந்த இரு தொகுதியிலும் அதிமுகவின் வாக்கு வங்கி வலுவாக இருப்பதால், விஜய்க்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு சற்று சறுக்கும் என்றே சொல்லப்படுகிறது. வருகின்ற 25ம் தேதி மதுராந்தகத்திலும் மற்றும் 30ம்  தாராபுரத்திலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு பின் கள நிலவரம் என்ன சொல்கிறது என்பதே ரிசல்டின் முக்கிய திருப்பமாக அமையும் என கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்