

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமையகத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மின் தடையின்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிகிறார். மேலும் மின்னகத்திற்கு சென்று மின் நுகர்வோர் புகாரில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யவுள்ளார். இந்த ஆய்வு சுமார் ஒருமணி நேரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு மின்னகம், மாநில மின் பளு பகிர்ந்தளிப்பு மையத்தை முதல்வர் பார்வையிட உள்ளார். மேலும் மின்பற்றாக்குறை, மின்தேவை மற்றும் மின் உற்பத்தி குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக ஆங்காங்கே எழுந்த புகார்கள் மற்றும் போராட்டத்தின் எதிரொலியாக இன்று முதல்வரே களத்தில் இறங்கி உள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக மின்வெட்டு அதிகரித்துள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாநகரங்களிலும் தொடர் மின்வெட்டு பிரச்சனை நிலவி வந்தது. இதனால் மக்கள் இரவு நேரங்களிலும், சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும் இந்த மின்வெட்டு பிரச்சனைகளை பல அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வந்தனர். அதனையடுத்து முதல்வர் அந்த துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்