இன்று தமிழகத்தில் 17வது சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் திமுக MLAக்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கையில் பதாகைகளுடனும் வருகை தந்தனர். பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்த போது, “இதற்கு முன் திமுக அரசு தயாரித்து கொடுத்த எந்த உரையையும் ஆளுநர் முழுமையாக படித்ததே கிடையாது, பல திருத்தங்கள் செய்யப்படும், ஆனால் இந்த முறை இந்த அரசு என்ன தயாரித்து கொடுத்தததோ அதை அப்படியே ஒரு வரி கூட மாற்றாமல் படித்திருப்பது, தமிழக ஆளும் கட்சிக்கும், மத்திய பாஜக அரசுக்கும் இணக்கம் உள்ளதாக எல்லோரும் சந்தேகிக்க வைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “தவேக பற்றிய சுய விளம்பரம் தான் சட்டசபையில் இருந்ததாக” குறிப்பிட்டார். “ஆளுநர் உரையில் கடந்த திமுக அரசின் நிர்வாகம் சரியில்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி சரியில்லை என்றால் எப்படி இவர்கள் சுட்டிக் காட்டியது போல் பல திட்டங்களை எங்கள் அரசு நிறைவேற்றி இருக்கும்?” என்று கேள்வி எழுப்பினர். “அப்படி நிர்வாகம் சரியில்லை என்றால் டெல்லி சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ் நாட்டின் சாதனைகள், மற்றும் இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார். இதெல்லாம் ஒரு மாத ஆட்சியின் சாதனைகளை? கிடையாது.. இது எல்லாம் எங்கள் திராவிட மாடல் ஆட்சி மற்றும் முக ஸ்டாலின் அவர்களின் சாதனை, திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டத்திற்கு தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்வதாகவும்” விமர்சித்தார். மேலும் இந்த அரசு வெறும் copy paste அரசாகவும் ஸ்டிக்கர் ஓட்டும் அரசாகவும் மட்டுமே செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டார்.
“ஆளுங்கட்சியினர் ரீல்ஸ் போடுவதற்கான கன்டென்ட் மெட்டீரியலாக தான் இந்த ஆளுநர் உரை இருந்ததாக விமர்சித்த அவர், முரண்பாடுகளின் உருவமாகவே ஆளுநர் உரை அமைந்துள்ளதாக குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 175 பாலியல் குற்றங்கள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவ படுகொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. தற்போதைய முதலமைச்சர் தேர்தல் பிரசாத்தின் போது, எப்படி எல்லாம் டயலாக் மற்றும் வீர வசனம் பேசினார் என்பதை தமிழக மக்கள் பார்த்தனர். அப்போது கேட்ட கேள்வி எல்லாம் “கண்ணாடி பார்த்த பேசுறீங்க” என்பது போல் உள்ளதாக விமர்சித்தார். மேலும் வேலியே பயிரை மேய்வது போல, நடக்கும் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலும் ஆளுங்கட்சியான தவெக-வை சேர்ந்தவர்களே ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார்.
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நான் முதல்வன்” திட்டத்திற்கு பெயரை மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்தார் எதிர்கட்சி தலைவர் உதயநிதி. நடக்கும் பிரச்சனைகள் பற்றி முதல்வர் விஜய் வாயை திறக்க வேண்டும் என்பதற்காக திமுகவினர் தயவு செய்து “வாய தொறங்க CM” என்ற கருப்பு பேட்ஜ் உடன் வந்துள்ளதாக தெரிவித்தார். முதல்வர் தான் பேச மாற்றாரு னு பார்த்த, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரீல்ஸ் வெறியில் சுற்றுவதாக” விமர்சித்தார். “தற்போதைய ஆட்சியில் மாற்றம் இல்லை, மக்கள் மாட்டி கொண்டதாக தான் நினைக்கிறார்கள்” என்றும் பீரோ புல்லிங் போல தவெக நிர்வாகிகள் MLA களை இழுபதிலையே மும்முரமாக இருக்கிறார்கள்” என்றும் குற்றம் சாட்டினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.