செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தமிழகத்தில் நிலவி வரும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள், தவெக MLA அருள் விக்னேஷ் மற்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அவரின் கணவர் புகார் கொடுத்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், “வெறும் வாட்ஸ்அப் தகவலை வைத்துக்கொண்டு தவெக எம்எல்ஏ மீது குற்றஞ்சாட்டக் கூடாது" என்றும் "தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்" என்றும் தெரிவித்தார். மேலும் பெண் ஆட்சியருக்கு MLA ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தீபாவளி அன்று தமிழகம் முழுவதும் 10 க்கு மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. இது குறித்த பேசிய மாணிக்கம் தாகூர், கடந்த காலங்களில் இதை விட அதிகமாக இருந்தது. காவல்துறையை பொறுத்தமட்டிலும் பல காலம் தமிழகத்தில் அரசியல் தலைவர்களுடைய கட்டுப்பாட்டிலும் அரசியல் குடும்பங்களுடைய கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளது. அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். நேர்மையான அதிகாரிகளுக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் 2024ல் தீபாவளி அன்று 10 கொலைகள் நடந்திருக்கு. கடந்த ஆண்டு 8 கொலைகள்... இதனால் காவல்துறை உடைய பொறுப்பு கூடுகிறது. இந்த ஆண்டு தீபாவளியில் தான் கொலை நடந்தது போல சில ஊடகங்கள் பரப்புகிறார்கள்.
அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி தவெக MLA யாரும் விக்னேஷ் குறித்து பேசிய மாணிக்கம் தாகூர், “எம்எல்ஏ உடைய பேட்டியை பார்த்தேன் Whatsapp ல ஒரு செய்தி போட்டு யாராவது கிளப்பி விடுகிறார்கள். அதற்காக ரியாக்ட் பண்ணி, குற்றவாளியாக்கி, மீடியா பரப்புகிறது. ஆனால் MLA, நான் அப்படி பண்ணல.. பண்ணின்னா cctvய பாருங்க, என்னுடைய போன் பாருங்கன்னு சொல்கிறார். எம்எல்ஏ பாவம், முதல் தடவை எம்எல்ஏ-வாக பதவியேற்றுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து, முதல் தலைமுறை எம்.எல்.ஏ-வாக உள்ளார். அரசியலில் அவர்களுக்கு பெரிய அனுபவம் எல்லாம் கிடையாது சாதாரணமாக வந்தவர்களை, மீடியா இப்படி குற்றம்சாட்டுவது ரொம்ப பாவம். தவறு நடந்திருந்தால், விசாரிக்க வேண்டியது வேற விஷயம் ஆனா தவறே நடக்காம வாட்ஸ்ப் செய்தியை வச்சு பேசுவது பாவம்.
இதற்கிடையில் செய்தியாளர் ஒருவர், "பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக கூறி உதயநிதி கைது செய்யப்பட்டார். ஆனால் இப்போது MLA மீது எந்த நடவடிக்கையும் கிடையாதா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மாணிக்கம் தாகூர், "உதயநிதி பேச்சு அயோக்கியத்தனமான பேச்சு, அருவருப்பான பேச்சு. அது மாதிரி MLA பேசியதற்கு ஏதாவது சாட்சி இருக்கா? ஏதாவது சாட்சி இருந்துச்சுன்னா காட்டுங்க" என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் உதயநிதி பேசியது அயோக்கியத்தனம் இவர் பண்ணது என்னவென்று விசாரிக்க வேண்டும் என்றும் குறிபிட்டார்.