தமிழ்நாடு

அஜித்தின் தாயாருக்கு கைபிடித்து ஆறுதல் சொன்ன விஜய்.. நேரில் சென்று வழங்கிய இரண்டு லட்சம் இழப்பீடு தொகை!

தம்பியிடம் கேட்டறிந்த விஜய் “எப்போதும் உங்களுக்கு தவெக உறுதுணையாக

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் போலீசார் தாக்கியதால் உயிரிழந்த அஜித் குமாரின் குடும்பத்தாருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சென்றும் போன் செய்து ஆறுதல் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

அஜித் குமாரின் வீட்டிற்கு சென்ற தவேக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் பொது செயலாளர் ஆனந்த் அஜித் குமாரின் தாய் மற்றும் தம்பிக்கு ஆறுதல் கூறினர். மேலும் நடத்தை அஜித் குமாரின் தம்பியிடம் கேட்டறிந்த விஜய் “எப்போதும் உங்களுக்கு தவெக உறுதுணையாக” என கூறி ரூபாய் இரண்டு லட்சத்தை இழப்பீடாக கொடுத்துள்ளார். மக்கள் கூட்டம் அவரை பார்க்க கூடவே அஜித்தின் குடும்பத்தாருக்கு இடையூறு கொடுக்க வேண்டாம் என்று உடனடியாக விஜய் கிளம்பியுள்ளார். 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.