கிரானைட் தொழிலதிபர் வீரமணி மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் வீரமணியுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் சாந்தி மற்றும் மகேந்திர சிம்மன் ஆகியோரும் அவருடன் தற்போது மற்றொரு உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆரம்பத்தில் வீடியோ ஆதாரம் இருந்தும் கடந்த திமுக ஆட்சியில் அவரை கைது செய்யாதது ஏன்? அவருக்கு சாதகமாக ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்க பட்டதா என சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பேசிய திமுக முன்னாள் அமைச்சர் “தமிழ்நாடு இன்று இருள் சூழ்ந்திருக்கிறது மின்வெட்டு மட்டுமல்ல, தமிழ்நாடு இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது, குழந்தை பாலியல் தொல்லை, முதியோர்களுக்கு பாலியல் தொல்லை, பாலியல் குற்றங்களில் பகிரங்கமாக ஆளுங்கட்சியினர் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக மக்கள் ஏன் இவர்களை ஆதரித்தோம் ஏன் இவர்களை இதில் அமர வைத்தோம் என எண்ணுகிறார்கள்.
முதலமைச்சர் முழு நேரமும் ரீல்ஸ் எடுக்கவே முன்னெடுக்கிறார். பாலத்தின் மேலே நிற்பது, இப்படி நடப்பது, என முழுக்க முழுக்க ரீல் எடுக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார். நாங்கள் தமிழ்நாட்டை மூன்றாம் இடத்தில் வைத்திருந்தோம், இன்று பின்னோக்கி ஓடு ஓடு என்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பொய்களை அவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் பொய்யை சொல்லியே ஆட்சியை ஓட்டிவிடலாம் என தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த நான்கு மாதத்தில் ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை, அவ்வாறு திட்டத்தை அறிவித்தாலும் அதனை வாபஸ் பெறுகிறார்கள்.
இடைத்தேர்தலில் எதற்காக போலீஸ் பாதுகாப்பு அளிக்கிறார்கள் ஏனென்றால் அவர்களின் வேட்பாளருக்கு அங்கு மக்கள் விரட்டியடிக்கிறார்கள். ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் ஆர்.வீரமணி குறித்து எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள்,நாங்கள் வழக்கை வாபஸ் பெற வில்லை,போதிய ஆதாரம் இல்லை என்பதற்காக காத்து இருந்தோம், வழக்கை நாங்கள் நிறுத்தி வைக்கவும் இல்லை, அதில் இருக்கும் வீடியோவில் சரியான காட்சி தெரியவில்லை.
இவர்கள் செய்கின்ற வேலையை பார்த்தால் குற்றவாளி தப்பிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகிறது, இந்த வழக்கில் யார் சம்பந்தப்பட்ட இருந்தாலும், அவருக்கு ஆதரவாக யார் இருந்தாலும் அனைவரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும் என நாங்கள் உறுதியாக இருக்கிறோம் அதற்காக எந்த போராட்டத்தையும் நாங்கள் முன்னெடுப்போம் ஒருபோதும் குற்றவாளி தப்பிவிடக் கூடாது அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி நாங்கள் யாருக்கும் உறுதுணையாக இல்லை.
சேலத்தில் பாலியல் வழக்கில் ஈடுபட்ட ஆளுங்கட்சியினரை இவர்கள் கைது செய்தார்கள் ஆனால் அதற்கு உறுதுணையாக இருந்தவர்களை இவர்கள் கைது செய்யவில்லை, இதில் யாரைக் காப்பாற்ற நினைக்கிறீர்கள்? தமிழ்நாடு மக்களுக்கு எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை ஊடகத்தினர் நீங்கள் தான் மக்களுக்கு உண்மையை கொண்டு செல்ல வேண்டும். விசாரணை தகவல்களை கசிய விடுவதும் ஒரு குற்றம்தான் இவர்கள் இதனை செய்திருக்கிறார்கள். எங்களுக்கு உங்களுடைய B TEAM தெரியும் ஸ்லீப்பர் செல்லையும் தெரியும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை விரட்டியடிக்க தயாராக இருக்கிறார்கள்.
திமுக மீது விதண்டாவாதமாக பழி சுமத்தி பொய்யான குற்றங்களை அடுக்கி சென்றாலும் அதற்கு பதில் கொடுக்கக்கூடிய ஆற்றல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. முதலமைச்சர் விஜய் செப்டம்பர் 21ம் தேதிக்கு முன்பு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, புகார் கொடுத்து 25 நாட்கள் ஆகியிருக்கிறது அதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, நீங்கள் கோமாவில் இருந்தீர்களா அல்லது உங்களிடம் யாராவது டீலிங் பேசினார்களா? வீரமணியிடம் பணம் வாங்கிக்கொண்டு கைது செய்யாமல் இருக்கக்கூடிய அவசியம் எங்களுக்கு கிடையாது. ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் குற்றம் வருகிறது, ஆனால் அவரை விட்டுவிட்டு மற்ற இரண்டு பேர் மீது வழக்கு பதிகிறார்கள், பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்து நாங்கள் ஒத்துப் போய் விட்டோம் என பேசுகிறார்கள்.
இதில் சம்பந்தப்பட்ட அரசு வழக்கறிஞர் நீதிபதி முன்பு வாய் திறக்காமல் அமைதியாக இருக்கிறார் ஏனென்றால் கோடி கோடியாக வாங்கி வந்திருப்பார்களோ என்னமோ? நீதிமன்றத்தை எந்த அளவிற்கு இந்த அரசாங்கம் ஏமாற்றி இருக்கிறது என நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்… இவர்கள் நாட்டை ஏமாற்றுகின்ற வேலைக்கு மதுராந்தகம் தாராபுரம் தான் விடை கொடுக்க வேண்டும். ஜெம் வீரமணி மட்டுமல்ல யாருக்கும் நாங்கள் சலுகை காட்ட வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு இருந்ததில்லை இருக்கப் போவதில்லை.
அவர் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நெருங்கியவர் மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் நெருங்கிவர்தான், நாங்கள் அவரை ஆதரிக்கவில்லை, திராவிட முன்னேற்றக் கழகம் போக்சோ விற்கு துணை போவது கிடையாது, எங்கள் ஆட்சியில் போக்சோ நீதிமன்றங்களை திறந்து இருக்கிறோம். ஜெம் வீரமணி வழக்கில் போதுமான ஆதாரம் இல்லை என நீதிமன்றத்திலேயே நாங்கள் கூறி இருக்கிறோம். அப்போது ஆதாரத்தை பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கொடுக்கவில்லை ஒரு தன் ஆர்வலர் வந்து இதனை பதிவு செய்கிறார், அதன் பிறகு தான் நாங்கள் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.
பாலியல் தொழில் இருக்க கூடிய பெண்களை இந்த அரசு எவ்வாறு காப்பாற்றும், எங்கள் மீது வீண்பழி சுமத்தாதீர்கள் இது சம்பந்தப்பட்டவர்களின் மீது நீங்கள் நடவடிக்கை எடுங்கள் அதனை நாங்கள் வரவேற்கிறோம். காவல்துறையினர் தற்போது அவர்களுக்கு அடிமையாக தான் இருக்கிறார்கள் ஒவ்வொரு விஷயத்தையும் அவர்களிடம் கேட்டு கேட்டு தான் செய்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் நாங்கள் பர்ஃபெக்ட் நாங்கள் குற்றவாளி அல்ல எந்த தவறும் செய்யவில்லை. வேங்கை வயல் விஷயத்தில், என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும் நாங்கள் என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பதும் அனைவருக்கும் தெரியும்” என கூறி தமிழக வெற்றி கழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.