மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரமானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அக்டோபர் 6 தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில், தீவிர பிரச்சாரத்தை தொடக்கியுள்ளது அரசியல் கட்சிகள். 2026 சட்டமன்ற தேர்தலின்போது மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவரது MLA பதவியை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பலராலும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அந்த தொகுதி மக்களே பெரும் அதிருப்திக்கு உள்ளாகியது. பின்னர் உடனடியாக தவெக-வில் இணைத்தார். தற்போது ராஜினாமா செய்த தொகுதியிலேயே மீண்டும் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளராக களமிறங்குகிறார்.
இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், பிரச்சார களம் அனல் பறக்கிறது. தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் மற்றும் நாம் தமிழர் ஆகியக்காட்சிகள் தங்களுது வேட்பாளர்களை அறிவித்து தீவிர மக்கள் சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் நாள்தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அக்கட்சியின் தலைவர் விஜய்யும் மதுராந்த பிரசாத்தை மேற்கொண்டார்.
தற்போது மதுராந்தகம் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்-தை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அதில் தவெக அரசு, அமைச்சர்கள், மற்றும் முதல்வர் விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மின்வெட்டு பிரச்சனை, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் அமைச்சர்களின் அணுகுமுறை குறித்து கட்டமாக விமர்சித்தார்.
அதில் முதல்வர் விஜய் குறித்து பேசியதாவது, “பொய் பேசுவதற்கு இன்றைய தவெக தலைவர் விஜய் வர்களுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றும் அது அவருக்கு பொருத்தமா இருக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, “முதல்வர் திரைப்படத்தில்தான் நடிச்சிட்டு இருந்தார். இப்போ மக்கள் மத்தியில் நடிக்க ஆரம்பிச்சிட்டார். ஆக இந்த அரசாங்கத்தை பொறுத்தவரைக்கும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது.
கரூர் சம்பவத்தை குறிப்பிட்ட EPS “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தாங்க.. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யாமல், ஓடோடி விமானத்தில் ஏறி வீட்டுக்கு போயிட்டாரு விஜய்.. தவெக கூட்டத்துக்கு வந்தவர்களையே அவரால் காப்பாற்ற முடியவில்லை.. எப்படி மக்களை காப்பாற்றுவார்கள்? முதலமைச்சர் விஜய் கூறியது போல அவரது உத்தரவால் வீரமணி கைது செய்யப்படவில்லை. அரசியல் ஆதாயம் தேடுவதற்காக பொய் கூறியுள்ளார். தவெக ஆட்சி பொறுப்பேற்ற பின் தான் குற்றச்சம்பங்கள் அதிகரித்துள்ளன. விஜய் தேர்தல் பிரசாரம் செய்த பின்னும் எடப்பாடி தொகுதியில் நான்தான் வெற்றி பெற்றேன். எத்தனை விஜய் வந்தாலும் எடப்பாடி தொகுதியில் நான் தான் வெற்றி பெறுவேன்.
திரையில் வேண்டுமானால் விஜய் ஹீரோ-வாக இருக்கலாம்.. ஆனால் நிஜத்தில் அவர் ஜீரோ என்றும் குறிப்பிட்டார். 70 படங்கள் நடித்தும் கூட ஒரு தேசிய விருது வாங்க முடியவில்லை, அங்கேயே பாஸ் பண்ண முடியவில்லை. இங்க அரசியலையா பாஸ் பண்ணப் போறீங்க? சட்டமன்றம் பட்டிமன்றமாக மாறிவிட்டது. தவெக ஆட்சிக்கு வந்ததே விபத்து. பிள்ளை பிடிப்பது போல் தவெக-வினர் எம்எல்ஏ-க்களை பிடிக்கிறார்கள். ஜனநாயகன் படம் ஒரு வாரம்கூட ஓடல... அந்த தயாரிப்பாளருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி.. நாடு உருப்படுமா?” என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்