

தமிழக அரசு சார்பில் 'தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை' திறந்து வைக்க முதல்வர் விஜய் மதுரைக்கு தனி விமானத்தில் வந்தடைந்தார். மேலும், தமிழக முதல்வரை மதுரை மக்கள் ஆரவாரத்துடன் வழிநெடுக வரவேற்பளித்தனர். 'தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் '1 கிராம் தங்க மோதிரம்' வழங்கப்படும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இன்று முதல்வர் சி. ஜோசப் விஜய் 'மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்' தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தை' தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பச்சிளம் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து இந்த விழாவினை தொடங்கிவைத்தார். மேலும், குழந்தைகளை தூக்கி கொஞ்சி, முத்தமிட்டு அந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். மேலும், விருப்பப்பட்டு தங்களது குழந்தைகளுக்கு பெயர் வைக்க கூறிய தாய்மார்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அந்த குழந்தைகளுக்கு பெயரும் வைத்தார். மேலும், விழாவினை சிறப்பிக்க வந்த தாய்மார்களோடு குழுப் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து மதுரையில் ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதல்வர் விஜய் திறந்துவைத்தார். மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை செலுத்தினர். மதுரையில் முதல்வர் விஜயை பார்க்க வந்து பொதுமக்கள் காந்தி அருங்காட்சியகம் வெளியே காத்திருந்தவர்கள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்களை மீட்ட காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விழாவிற்கு, வருவதற்கு முன் முதல்வர் விஜய் திறந்தவெளி வாகனத்தில் சாலையின் இருபுறத்திலும் இருந்த மக்களை பார்த்து கையசைத்தவண்ணம் வந்தார். முதல்வர் விஜயை காண காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர். மேலும், முதல்வர் விஜய் வந்துகொண்டிருந்தபோது, அவரைக் காண்பதற்காக இளைஞர் ஒருவர் 'டிரான்ஸ்ஃபாமர்' மீது ஏறி நின்றார். அப்போது அதை பார்த்து அதிர்ச்சியடைந்த விஜய், அந்த இளைஞரை கீழே இறங்கும்படி சைகை காட்டினார். அவர் மீண்டும் மீண்டும் விஜயை நோக்கி கை அசைத்துக் கொண்டே இருந்ததால் .. ஆத்திரமடைந்த அவர் இளைஞரை அதட்டினர் . அதனையடுத்து அவர் கீழே இறக்கினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்