Vijay Dharapuram Bypoll Campaign 
தமிழ்நாடு

"அதான் ஒண்ணு வளர்த்து வச்சிருக்கீங்களே.. ஆபாச நதி" - முதல் முறையாக உதயநிதியை அட்டாக் செய்த முதல்வர் விஜய்!

என்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி என சத்தமா சந்தோஷமா சிரிச்சுட்டே சொல்கிறார்..

Mahalakshmi Somasundaram

இடைத்தேர்தலுக்கு 5 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. அதன்படி இன்று(செப் 30) தாராபுரம் தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் செய்தார். அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர் சத்யபாமா பேசியதை தொடர்ந்து முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து தற்போது வரை திருப்பூரில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.

மேலும் சிங்கப்பேன் சிறப்பு படை, விரிவான மருத்துவ காப்பீட்டு தொகை மற்றும் முதியோர் காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்தார். பின்னர் கடந்த தேர்தலில் மக்கள் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்து திமுகவை வீட்டிற்கு அனுப்பியதையும் மறந்து இன்னும் அதிகாரம் செய்து கொண்டிருக்கும் திமுகவை போல மன்னராட்சி செய்யும் பழக்கம் நமக்கு இல்லை என திமுக விமர்சித்து tvk மக்களுக்காக அரசியளுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் இல்லை என்பதை தெளிவாக சொல்லிவிட்டுத்தான் அரசியலுக்கு வந்தோம். அதனால் தான் நமது கொள்கை மதசார்ப்பற்ற சமூக நீதி கொள்கை “கிருஷ்ணா ஜெயந்திக்கும் வாழ்த்து சொல்வோம்.. கிறிஸ்மஸுக்கும் வாழ்த்து சொல்லுவோம்.. பக்ரீத்துக்கு வாழ்த்து சொல்வோம்” என அனைத்து மதமும் தங்களுக்கு ஒன்று தான் என்று தெரிவித்தார். அண்ணாவை உதாரணம் காட்டி பேசிய திமுக உறுப்பினரை விமர்சித்த முதல்வர் அண்ணாவை போல தவெக தான் எளியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது என கூறினார்.

கொளத்தூரில் ஸ்டாலின் பேசியதை விமர்சித்த முதல்வர் “ஸ்டாலின் மறதியில் உண்மையை போட்டு உடைத்திருக்கிறார்.. என்னை தோற்கடித்த கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி சொல்கிறார்.. இதை சத்தமா சந்தோஷமா சிரிச்சுகிட்டே சொல்றார்” இதை பார்க்கும் போது அந்த குழந்தையே நீங்க தான் சார் என்பது போல இருப்பதாக விஜய் கூறினார். திமுக ஆட்சியில் நடந்ததை மக்கள் நினைவில் வைத்துக் கொண்டுதான் இதை செய்திருக்கிறார்கள் விமர்சித்தார். மக்கள் தோற்கடித்ததற்கும் விஜய் தான் காரணம் என்று சொல்லும் அவர் இப்போது என்னை ஒருமையில் பேசுகிறார் என்றார்.

மேலும் ஸ்டாலின் கட்சிக்காரர்களை ஏவிவிட்டதாக தெரிவித்த முதல்வர் “நீங்க பேசுங்க சார்.. தாராளமா பேசுங்க.. உங்க ஏஜெண்டுகளை விட்டு.. உங்களுக்கு பிடித்த கட்சிக்காரர்களைவிட்டு.. அது தான் பரம்பரை சொத்து ஆபாச நதி வளர்த்து வச்சு இருக்கீங்களே வன்ம நதியை விட்டு நீங்க பேசுங்க” என மறைமுகமாக உதயநிதியை விமர்சித்தார். தஞ்சாவூரில் காவிரி விவகாரத்தில் உதயநிதி ஆபாசமாக பேசிய நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அவர் இடைத்தேர்தல் கூட்டங்களிலும் காவிரி விவகாரத்தில் பேசிய சம்பவத்தை மறைமுகமாக நினைவுபடுத்தி வரும் நிலையில் முதலவர் அவரை “ஆபாச நதி” என விமர்சித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்