முதல்வர் முன்பே.. கண்ணீர் விட்டு கதறிய வேட்பாளர் சத்தியபாமா.. உடனே தோள்களை தாங்கிப்பிடித்த விஜய்

“ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள்” என பரப்புரை கூட்ட மேடையிலையே கண்கலங்கினார்
Sathyabama
Published on: 
Updated on: 
1 min read

தாராபுரம் இடைத்தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சார களம் தீவிரமடைந்துள்ளது. அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என தொடர்ந்து நாள்தோறும் தொகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். கோவை விமானம் வந்தடைந்து அங்கிருந்து பிரச்சார திடல் வரை சாலை மார்க்கமாக சென்றார். அவருக்கு வழி எங்கும் மக்கள் இருபுறமும் காத்திருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

5000 பேருக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவித்திருந்த நிலையில், அனுமதித்த அளவை கடந்து மக்கள் கூட்டம் காலை முதலே திடலில் குவிந்து காத்திருந்தனர். இந்த கூட்டத்தில் தவெக அமைச்சர்கள் N ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கலந்துகொண்டு தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.  

சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற சத்யபாமா, தனது MLA பதவியை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தார். அதனையடுத்து தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதே தொகுதியில் மீண்டும் தவெக சார்பில் போட்டியிடுகிறார் சத்யபாமா என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் சத்யபாமா, தன் மீது அவதூறு பரப்புவதாக கண்கலங்கிய பேசினார்.

உடனடியாக முதல்வர் விஜய் அவரை தோளில் அணைத்து ஆறுதல் சொன்னார். சத்யபாமா பேசியதாவது, “ஒரு பெண் என்றும் பாராமல் என்னை அசிங்கமாக பேசுகிறார்கள்” என பரப்புரை கூட்ட மேடையிலையே கண்கலங்கினார். கண்கலங்கி பேசிய தவெக வேட்பாளர் சத்தியபாமாவிற்கு ஆறுதல் கூறினார் முதல்வர் விஜய். மேலும் “எம்ஜிஆரின் மறுபிறவி தான் விஜய் என்று மக்கள் நினைப்பதால் தான் அவர் வெற்றி பெற்றுள்ளார் என்றும் தெரிவித்தார். 

தான் பணம் வாங்கியதாகவும், அதற்காக ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்ததாகவும் அவதூறு பரப்புகிறார்கள். திமுகவுடன் அதிமுக கூட்டணி வைக்க முயன்றதை பொறுக்காமல் தான் அங்கிருந்து வெளியேறினேன்” என்றும் தெரிவித்தார். “அதிமுக இயக்கத்தை பிடிக்காமல் வெளியேறவில்லை, பழனிசாமியின் துரோகம் பிடிக்காமல் வெளிவந்தோம்” என்றும் “பழனிசாமியின் தலைமை பிடிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டார். ஒரு கட்சியின் பொதுச்செயலாளர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு பழனிசாமி உதாரணம், எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தான் உதாரணம் என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com