தமிழ்நாடு

இன்று களமிறங்கும் விஜய்.. இந்த இடைத்தேர்தலில் தவெகவின் "கடைசி ஆயுதம்" - திமுகவின் "பெட்டி" Strategy எடுபடுமா?

இந்த அதிருப்திகளை எல்லாம் விஜயின் பிரச்சாரம் சரி செய்யுமா என்பதில் தான் உள்ளது தவெக-வின் வெற்றி கனவு...

Muthu Lakshmi

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலை ஒட்டி, இன்று செங்கல்பட்டு ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே பகல் 3 மணியளவில் முதல்வர் விஜய் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார். இந்த பரப்புரைக்கு டோக்கன் பெற்ற 5,000 பேர் மட்டுமே  அனுமதிக்கப்படுவார்கள் என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். மேலும் பரப்புரைக்கு கர்ப்பிணிகள். சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தல்.

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரமானது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இடைத்தேர்தலை பலமுனை பொடியாக மாறியுள்ள நிலையில், இந்த தேர்தலானது பலராலும் கூர்ந்து கவனிக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலின்போது மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்களது பதவிகளை 20 நாட்களுக்குள் ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பலராலும் காட்டமாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக அந்த தொகுதி மக்களே பெரும் அதிருப்திக்கு  உள்ளானார்கள். 

இதில் ட்விஸ்ட் கொடுக்கும் விதமாக ராஜினமா செய்தவர்களை அதே தொகுதியில் வேட்பளர்களா அறிவித்தது தமிழக வெற்றி கழகம். இது உட்கட்சியியிலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. முன்னாள் நிர்வாகிகளுக்கு சீட்  கொடுக்காமல், மாற்று கட்சியில்  இருந்து வந்தவர்களுக்கு சீட்டு கொடுப்பது சரியான அணுகுமுறையல்ல என்று எதிர்ப்புகள் எழுந்தன. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகி, கூட்டணியில் இருந்தவர்களே விமர்சிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர், அமைச்சர் N ஆனந்த் இரு தொகுதியிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக வீடுகளுக்குச் சென்று பொதுமக்களை சந்திப்பது, அவர்களுடன் உணவருந்துவது, மக்களின் குறைகளை கேட்பது, உள்ளிட்ட செயல்பாடுகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் இரு வேட்பாளர்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறார். இருப்பினும் தொகுதி மக்கள் தொடர்ந்து தவெக-வினருக்கு எதிர்ப்பினையே தெரிவித்து வருகின்றனர். 

தவெக வேட்பாளர் சத்தியபாமா, குண்டடம் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய குமாரபாளையம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி பொதுமக்கள் சிலர் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பாக சத்தியபாமாவிற்கு கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் “ரூ.50 கோடி பணம் வாங்குனீங்க. ஓட்டு போட்டவங்களுக்கு என்ன பதில்?” என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு சத்தியபாமா, நான் வாங்குனதா நீங்க பார்த்தீங்களா? என பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. பொதுமக்களின் எதிர்ப்பை சமாளிக்கமுடியாத சத்தியபாமா தனது வாக்கு சேகரிப்பை தொடர்ந்து நடத்தாமல், பாதியிலேயே பிரசாரத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறும் நிலைமையானது.

இதே போல் மதுராந்தகத்தில் தவெக சார்பில் போட்டியிடும் மரகதத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். “பணத்திற்காக கட்சி மாறி சென்றுவிட்டு மீண்டும் வாக்கு கேட்க வருவது எந்த விதத்தில் நியாயம்” என்றும் “எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுங்கள்” வேண்டும் கேள்வி எழுப்பினார்கள். மேலும் “துரோகி… துரோகி’’ என கோஷங்கள் எழுப்பி, கருப்புக்கொடி ஏந்தி பிரச்சாரத்தை  முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பொதுச்செயலாளர், வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் என நாளும் தொகுதி மக்களை சந்தித்த வண்ணம் இருக்கும் போதிலும் களத்தில் நிலைமை மோசமானது.

மேலும் கருத்துக்கணிப்பின் படி இடைத்தேர்தல் களம் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு மிகவும் சவாலானதாகவும், கடுமையான போட்டி நிறைந்ததாகவும் இருக்கும் என தெரிகிறது. மேலும் குதிரைபேர விவகாரம், வாக்குறுதிகளில் தவெக அரசின் அணுகுமுறை மற்றும் சட்ட ஒழுங்கு குறிப்பிட்ட இடங்களில் விஜய் சரிவர கவனம் செலுத்தவில்லை என்பதே அதிருப்திக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த அதிருப்திகளை எல்லாம் விஜயின் பிரச்சாரம் சரி செய்யுமா என்பதில் தான் உள்ளது தவெக-வின் வெற்றி கனவு.

இந்த இக்கட்டான சூழலில் தவெகவின் ஒரே ‘பிரம்மாஸ்திரம்’ விஜய்யின் பிரசாரம் மட்டுமே என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது கழகம். அதனால் இன்று 3 மணி அளவில் மதுராந்தகத்தில், வேட்பாளர் மரகதத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அங்கு அவர் கொடுக்கும் வாக்குறுதிகளும், தொகுதி குறித்த பிரச்சனைகளை பேசுவதும் இப்போது ஒரே வழியாக மாறியுள்ளது. இப்பொதும் திமுக.. திமுக என பேசுவார் என்றே தெரிகிறது. காரணம் அமைச்சர்கள் போகும் இடமெல்லாம்  முன்னாள் அரசை குறித்த குற்றச்சாட்டை தொடர்ந்து வருகிறார்கள். மின்வெட்டு பிரச்சனை, சட்ட ஒழுங்கு பிரச்சனை மற்றும் விவசாயிகள் பிரச்சனை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு திமுகவையே கைநீட்டி செல்கிறார்கள். இன்னும்  தவெக-விற்கு இந்த காய்ச்சல் போகவில்லையே என்றே தெரிகிறது. சமீபத்தில் அமைச்சர் நிர்மல் குமார் திமுகவும் அதிமுகவும் கள்ள கூட்டணியில் இருப்பதாக பேசியிருந்தார்.  விஜயின் தேர்தல் பிரச்சார script-ம் அப்படியே இருக்கும் என தெரிகிறது.

களத்தில் திமுக மற்றும் அதிமுக கட்சியினர் தீவிர பிரசாரத்தில் இடப்பட்டு வருகின்றனர். அதில் தவெக-வின் குதிரை பேர அரசியல் குறித்த விமர்சனம் முக்கிய டூல் ஆக உள்ளது. இந்த நிலையில் திமுகவின் முக்கிய Strategy ஆக உள்ளது, ஆளும் கட்சியாக இருக்கும் தவெக, மற்ற கட்சியினர் மீது "குதிரை பேர அரசியல்" மற்றும் பணப் பலத்தைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, அதை மக்களுக்கு உணர்த்துவதே ஆகும். பெட்டி வாங்கி கொண்டு தான் கட்சி மறுக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை முன் வைத்து தீவிர பிரசாரத்தில் இறங்க வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்