2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக எஸ்பி வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி என இரண்டு அணிகளாக பிரிந்து. அதையடுத்து எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 MLA க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பதவிகள் பறிக்கப்பட்டது. இது கட்சியில் பெரும் பராபரைப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து எஸ்பி வேலுமணி மற்றும் சில ஆதரவாளர்கள் மீண்டும் ஈபிஎஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்தி கட்சியில் இணைத்துக் கொண்டனர். விஜயபாஸ்கர் இந்த ஆலோசனையிலும் சந்திப்பிலும் பங்கு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர் கட்சியில் இருந்து முற்றிலுமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகின.
அதையடுத்து புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்த முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் நீக்கிவிட்டு புதிய மாவட்ட செயலாளர் ஆக பழனிவேலை அறிவித்திருந்தார் அதிமுக தலைமை. இதை எதிர்த்து விஜயபாஸ்கர் தலைமையிலான அதிமுகவினர் கண்டன கோஷங்களையும், சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திலும் விஜயபாஸ்கர் தரப்பினர் கலந்து கொள்ளவில்லை. இதனால் புதுக்கோட்டை மாவட்ட அதிமுக அலுவலக சாவியை புதிய மாவட்ட கழக செயலாளர் பழனிவேல் வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டு சாவியை கைமாற்றினார். இன்று பொறுப்பேற்க அலுவலகத்திற்கு வருகை தந்த பழனிவேல் அதிமுக அலுவலகத்தை திறந்து வைத்தார். அதிமுக அலுவலகத்திற்கு உள் சென்றவுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் புகைப்படம் பொறித்த பேனரை அதிமுகவினர் கிழித்து அகற்றினர்.
இதையடுத்து விஜயபாஸ்கரிடம் செய்தியாளர்கள் உட்கட்சி விரிசல் மற்றும் அலுவலக சாவி கைமாறியது குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விஜயபாஸ்கர் “பத்திரிக்கையின் பரபரப்புக்கும் யூகங்களுக்கும் என்னால் இந்த செய்தியையும் சொல்ல முடியாது” என்றும் “அது மாதிரி எந்த செய்தியும் இல்லை, கடந்த நான்கு தினங்களாக வாக்களித்த வாக்காளர் தெய்வங்களுக்கு நன்றி தெரிவித்து வருவதாகவும்” தெரிவித்தார்.
நான்கு நாட்களுக்கு பிறகு இப்போது தான் புதுக்கோட்டை வந்ததாகவும், அதிமுக மாவட்ட அலுவலகத்தின் சாவியை பெருந்தன்மையோடு நாங்கள் ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார். அதிமுகவில் நீங்கள் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு எதுவும் பதில் அளிக்காமல் சென்றுள்ளார் சி விஜயபாஸ்கர். சட்டசபை வாக்கெடுப்பில் தவெக- விக்கு ஆதரவு அளித்த விஜயபாஸ்கர், அமைச்சரவையில் இடம் பெறாததால் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தார். அத்துடன் பறிக்கப்பட்ட அதிமுக பதவி என அடுத்தடுத்து அரசியல் சரிவை சந்தித்து வருகிறார். அப்படி கட்சியில் இருந்து முழுவதுமாக விலகினால் தமிழக வெற்றி கழகத்தில் இணைய வாய்ப்புள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.