“90% அதிமுகவினர் தவெக-வில் இணைவார்கள்” - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சால் பரபரப்பு! மீண்டும் பிளவுபடுமா EPS அணி?

"தவெக-வில் இணைவதற்கு யாருக்கும் ஆஃபர் கொடுத்து அழைக்கவில்லை" என்றும்
Aadhav arjuna
Published on
Updated on
1 min read

இன்று சென்னை பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று தமிழக வெற்றி கழகம் சார்பாக நடந்த கட்சி கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல், கட்சி தாவல் மற்றும் அதிமுக MLA-க்கள் ராஜினாமா குறித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு கூட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் அதிமுக தொண்டர்கள் தவெக கட்சியில் இணைத்து வருவது குறித்து பேசிய அவர், “அதிமுகவில் இருந்து வருபவர்களை கனிவுடன் வரவேற்கும் இடத்தில் தவெக உள்ளது” எனவும் “ஏன் அதிமுக தொண்டர்களை வரவேற்கிறோம் என்றால் புரட்சி தலைவி அம்மா அவர்களின் இறப்பிற்கு பின் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவுகள் அதிமுக தொண்டர்களுக்கு எதிராக இருந்தது, அதனால் தான் 2014 மற்றும் 2016 தோல்விகள்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் பிஜேபியுடன் கூட்டணி வைத்தது தான் அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். “அதிமுகவில் மிகப்பெரிய சூழ்ச்சி நடந்தது, அதனால் தான் இன்று அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகக்தில் இணைகிறார்கள்” என்றும் அந்த சூழ்ச்சி “தேர்தல் முடிவுகள் முடிந்த பின் திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது தான்’ என்றும் இதனால் தான் அதிமுவில் உட்கட்சி மோதல் நடந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் இதை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் மற்றும் எஸ்பி வேலுமணி ஆகியோர், அதனாலே அவர்கள் முக்கிய பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அதிமுக தலைமை எடப்பாடி பழனிச்சாமியை குற்றம் சாட்டினார்.

அதைத்தொடர்ந்து பேசிய அவர் “எம்ஜிஆர் எதற்காக கட்சியை தொடங்கினாரோ அந்தக் குறிக்கோளை, அந்த வழியில் நடக்கூடியது தமிழக வெற்றி கழகம் மட்டும் தான்” என்றும் குறிப்பிட்டார். மேலும் “90 சதவீத அதிமுகவினர் அக்கட்சியினை தூங்கி எரிந்து விட்டு தமிழக வெற்றி கழகத்தில் சேர்வதற்கு முற்பட்டு வருகிறார்கள்” என்றும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் குறித்து பேசிய ஆதவ் அர்ஜுனா, சாமானியனை முதல்வராக மாற்றி அழகு பார்த்தார் ஜெயலலிதா, ஆனால் அவர் திமுகவில் சேர்ந்து MLA ஆகியள்ளார்” என கடுமையாக விமர்சித்தார். இறுதியாக “இன்னும் ஒரு மாதத்தில் 90 சதவீத அதிமுகவினர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார்கள்” எனவும் “தவெக-வில் இணைவதற்கு யாருக்கும் ஆஃபர் கொடுத்து அழைக்கவில்லை” என்றும் தெரிவித்தார்.    

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com